புதிய அத்யாயத்தில் போர்ஷே... காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியிருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் புதிய போர்ஷே மசான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.
கேயேன் எஸ்யூவியின் மினி மாடலாக வர்ணிக்கப்படும் இந்த எஸ்யூவி மூலம் புதிய செக்மென்ட்டில் போர்ஷே காலடி பதித்துள்ளது. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

போர்ஷே மசான்
போர்ஷேவின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் புதிய எம்க்யூபி(MQB) பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி பெரிய இடைவெளிகள் கொண்ட கிரில், சரிவான கூரை, அழகான வளைவு, நெளிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்டுகள்
மசான் எஸ், மசான் எஸ் டீசர், மசான் டர்போ ஆகிய 3 வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

பேஸ் மாடல்
பேஸ் மாடலான மசான் எஸ் எஸ்யூவியில் 3.0 லிட்டர் வி6 பை- டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 340 பிஎஸ் பவர் கொண்டது. 0 -100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும்.

மிட் வேரியண்ட்
மசான் எஸ் டீசல் மாடலில் 260 பிஎஸ் பவர் கொண்ட 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 6.3 வினாடிகளில் கடந்துவிடும்.

மசான் டர்போ
இந்த டாப் வேரியண்ட்டில் 400 பிஎஸ் பவர் கொண்ட 3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0 -100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டிவிடும்.

விலை
போர்ஷே மசான் எஸ்யூவி 43,300 பவுண்ட் முதல் 59,300 பவுண்ட் வரையிலான விலைப் பட்டியலில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவுக்கு...
இந்தியாவிலும் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வர உள்ளது. ரூ.45 லட்சம் விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








