போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்ல ஆம்புலன்ஸ்:ரஷ்யர்களின் 'குறுக்குப்புத்தி'!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிரைவர் மீது சந்தேகம் கொண்டு அந்த ஆம்புலன்சை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அந்த ஆம்புலன்ஸ் உள்ளே சொகுசான இருக்கைகள் இருந்தன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர வசதிகள் எதுவுமே இல்லை. மேலும், உள்ளே நல்ல திடகாத்திரமானவர்கள் அமர்ந்திருந்தனர். மருத்துவ பணியாளர்களா இருப்பார்களா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். ஆனால், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தீவிர விசாரணையை போலீசார் துவங்கினர்.
இதில், அந்த ஆம்புலன்ஸ் உள்ளே அமர்ந்து வந்தவர்கள் மருத்துவ பணியாளர்கள் இல்லை. அனைவரும் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் என தெரியவந்தது. போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்வதற்காக ஆம்புலன்ஸ் போன்ற வேடமிட்ட இந்த டாக்சியை பயன்படுத்தி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
மேலும், இந்த டாக்சியில் செல்வதற்கு நம் நாட்டு மதிப்பில் ரூ.10,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து ஆம்புலன்ஸ்கள் மீதும் ஒரு கண் வைக்கவும், பதிவு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்கள் குறித்தும் போலீசார் தற்போது ஆய்வை துவங்கியுள்ளனர். இந்த சம்பவம் மாஸ்கோ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








