13 சீட்டர் வேன், ஆம்புலன்ஸ், மினி பஸ்சை களமிறக்கும் அசோக் லேலண்ட்
ஸ்டைல் எம்பிவி காரை தொடர்ந்து புதிய தோஸ்ட் எக்ஸ்பிரஸ் பயணிகள் வேன் உள்பட 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
ஜப்பானிய நிறுவனமான நிசானுடன் கூட்டணி அமைத்து சிறிய மற்றும் நடுத்தர ரக வாகனங்களை அசோக் லேலண்ட் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த கூட்டணியில் வெளிவந்த தோஸ்ட் மினி டிரக் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, எவாலியாவின் ரீபேர்ஜ் மாடலான ஸ்லைடல் எம்பிவியை சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில், தோஸ்ட் அடிப்படையிலான புதிய மாடல்களை அந்த நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் லேலண்ட் துணைத் தலைவர் சுமந்த்ரன் கூறியதாவது," போட்டியாளர்களைவிட ரூ.3 லட்சம் குறைவான விலையில் ஸ்டைல் எம்பிவியை விற்பனைக்கு விட்டுள்ளோம்.
அதிக எரிபொருள் சிக்கனம், குறைந்த முதலீடு கொண்ட எம்பிவியாக ஸ்டைல் இருக்கும். மாதத்திற்கு 500 முதல் 1,000 ஸ்டைல் எம்பிவி கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
ஸ்டைலை தொடர்ந்து, இந்த மாத இறுதியில் தோஸ்ட் அடிப்படையிலான புதிய 13 சீட்டர் பயணிகள் வேனையும், அடுத்த மாதம் தோஸ்ட் ஆம்புலன்ஸ் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
இதுதவிர, வரும் ஜனவரியில் 6 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட பார்ட்டனர் என்ற நடுத்தர வகை டிரக்கையும், 27 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட பார்ட்னர் என்ற பஸ் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம்.
மார்க்கெட்டில் சுணக்கம் நிலவுவதால் வாடிக்கையாளர்கள் தேவைகேற்ப விரும்பும் மாடல்களையும், விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக புதிய மாடல்களில் கவனம் செலுத்தி வருகிறோம்,' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








