தோஸ்ட் பாசஞ்சர் வேனை அறிமுகப்படுத்தும் லேலண்ட்!

வரும் அக்டோபரில் தோஸ்ட் பயணிகள் வாகனத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தோஸ்ட் என்ற மினி டிரக்கை தயாரித்து வருகிறது. மார்க்கெட்டில் தோஸ்ட் மினி டிரக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தோஸ்ட் மினி டிரக்கின் பயணிகள் வாகனத்தை லேலண்ட்-நிசான் கூட்டணி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மினி வேன் வர்த்தக மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. டாடா விங்கர் உள்ளிட்ட மினி வேன்களுக்கு இந்த புதிய தோஸ்ட் பயணிகள் வேன் போட்டியை கொடுக்கும்.

 தோஸ்ட் மினி டிரக்

தோஸ்ட் மினி டிரக்

இதுவரை 36,000 தோஸ்ட் மினி டிரக்குகளை லேலண்ட் -நிசான் கூட்டணி விற்பனை செய்துள்ளது. மைலேஜில் சிறந்த மினி டிரக்காக பெயர் பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

தோஸ்ட் மினி வேன்

தோஸ்ட் மினி வேன்

லேலண்ட் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் மினி வேனில் 8 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

தோஸ்ட் மினி டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 58 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் காமன்ரெயில் டீசல் எஞ்சினில் சில மாற்றங்களை செய்து இந்த மினி வேனில் பொருத்தப்பட உள்ளது.

 இன்டிரியர்

இன்டிரியர்

தரமிக்க பாகங்களுடன் இன்டிரியர் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

வசதியான இருக்கை

வசதியான இருக்கை

போட்டியாளர்களைவிட இருக்கைகள் மிக சொகுசாகவும், அமர்வதற்கு அதிக இடவசதியுடன் சிறப்பாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருவதாக லேலண்ட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஸ்டைல் அறிமுகம்?

ஸ்டைல் அறிமுகம்?

நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலான ஸ்டைல் எம்பிவியை இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக லேலண்ட் தெரிவித்துள்ளது.

 வர்த்தக மார்க்கெட்டில் மட்டும்

வர்த்தக மார்க்கெட்டில் மட்டும்

எவாலியா தனி நபர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதால், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வர்த்தக மார்க்கெட்டில் மட்டும் ஸ்டைலை விற்பனை செய்ய உள்ளதாக லேலண்ட் தெரிவித்துள்ளது.

 குறைந்தபட்ச வசதிகள்

குறைந்தபட்ச வசதிகள்

டாக்சியாக மட்டும் பயன்படுத்தப்பட இருப்பதால் குறைந்தபட்ச வசதிகளுடன் ஸ்டைல் வருகிறது. எவாலியாவில் இருக்கும் சிறப்பு வசதிகள் இருக்காது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2013, 15:36 [IST]
English summary
Ashok leyland- Nissan JV is now planning to launch the passenger car version of Dost in October this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+