வரும் 16ல் அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி ரிலீஸ்!
கனரக வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனம் வரும் 16ந் தேதி ஸ்டைல் எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்டைல் எம்பிவி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிசான் எவாலியா எம்பிவி காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் ஸ்டைல்.

ஆனால், சிறிய மாற்றங்களுடன் ஸ்டைல் எம்பிவியை களமிறக்குகிறது அசோக் லேலண்ட். நிசான் பார்ட்னரான ரெனோவின் கே9கே டீசல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி/பெட்ரோல் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
வரும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மேம்படுத்தப்பட்ட எவாலியா போன்று நடுவரிசையில் கேப்டன் இருக்கையுடன் வரும் என தகவல்கள் கூறுகின்றன. வர்த்தக மார்க்கெட்டை குறிவைத்து நிசான் எவாலியாவைவிட ரூ.50,000 குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








