அசோக் லேலண்டின் புதிய ஆடம்பர பஸ்: டெல்லியில் அறிமுகம்
இதுவரை இல்லாத அளவுக்கு சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பர பஸ்சை அசோக் லேலண்ட் நிறுவனம் டூஃபிள்ஸ் பவுண்டேசனுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. டிசி டிசைன் நிறுவனம் இந்த பஸ்சின் இன்டிரியரை வடிவமைத்துள்ளது. 9 பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக இருக்கும்.
லக்சுரா மேஜிக்கல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பஸ்சில் மசாஜ் ஸ்பா, ப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன் மற்றும் வாஷ் ரூம் வசதிகள் இருக்கின்றன. மிக சொகுசான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. டெல்லியை சேர்ந்த மான்டூர்ஸ் நிறுவனம் இந்த பஸ்சை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த பஸ்சில் பயணம் செய்ய 8 மணி நேரத்திற்கு ரூ.30,000 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள ஆக்ரா உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு இந்த பஸ்சை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். ஆடம்பரத்தை வழங்குவது மட்டும் நோக்கமாக இராமல் இந்த பஸ்சிலிருந்து கிடைக்கும் வருவாயின் 50 சதவீதம் தொண்டு நிறுவனங்களுக்கு சேர உள்ளது. கூன்ச் என்ற தொண்டு நிறுவனத்திற்கும், சென்னையிலுள்ள புற்றுநோய் கழகத்திற்கும் இந்த நிதி வழங்கப்பட உள்ளது.
பிற நகரங்களிலும் இதேபோன்று நல நிதி சேகரிப்பு திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆடம்பர பஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது டூஃபிள்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் ஆடம்பரத்தை கண்களால் அள்ளிப் பருக வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

அறிமுக விழா
டெல்லியில் நடந்த அறிமுக விழாவின்போது அசோக் லேலண்ட் அதிகாரிகள், கூன்ச் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் மான் டூர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டிசைன்
அசோக் லேலண்ட் லக்சுரா பஸ்சின் சாஸியில் இந்த ஆடம்பர பஸ் கட்டப்பட்டுள்ளது.

பின்புற எஞ்சின்
வால்வோ பஸ்கள் போன்று இந்த பஸ்சிலும் பின்புறத்தில் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

சொகுசு இருக்கைகள்
விசாலமான ஹாலை போன்று இருக்கும் இதன் உட்புறத்தில் முன்னோக்கிய சொகுசு இருக்கைகள்.

பொழுதுபோக்கு வசதிகள்
இந்த பஸ்சில் டிவி மற்றும் தனித்தனியான கன்ட்ரோல் கொண்ட மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

வைஃபை இணைப்பு
இந்த பஸ்சில் வைஃபை இன்டர்நெட் இணைப்பு வசதியும் இருக்கிறது.

மைக்ரோ ஓவன்
இந்த பஸ்சில் மைக்ரோ ஓவன், சிறிய குளிர்சாதன பெட்டியும் உள்ளது.

பணியாளர் அறை
இந்த பஸ்சில் பணியாளர் அறையும் உண்டு. இன்டர்காமில் அழைத்தால் உடனடி சேவை கிடைக்கும்.

சிறப்பு சஸ்பென்ஷன்
இந்த பஸ்சில் பிரத்யேக ஏர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பதால் பயணத்தின்போது அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும்.

ஸ்பா
இந்த பஸ்சில் மசாஜ் ஸ்பாவும் இருக்கிறது. இதற்காக, பயிற்சி பெற்ற பணியாளரும் இருக்கின்றனர்.

வாடகைக்கு வேண்டுவோர்...?
ஒரு நல்ல காரியத்துக்காக இயக்கப்படும் இந்த ஆடம்பர பஸ்சை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் மான்டூர்ஸ் நிறுவனத்தை +91 81303 44466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Images Source: Indianautos blog


Click it and Unblock the Notifications








