எவாலியாவைவிட குறைவான விலையில் லேலண்ட் ஸ்டைல் அறிமுகம்
ரூ.7.50 லட்சம் விலையில் அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி கார் விற்பனைக்கு வந்துள்ளது. அசோக் லேலண்ட் - நிசான் மோட்டார் கூட்டணியில் தோஸ்ட் மினி டிரக்குக்கு அடுத்து வந்திருக்கும் இரண்டாவது மாடல் இது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் எவாலியாவின் ரீபேட்ஜ் மாடலான லேலண்ட் ஸ்டைல் வர்த்தக மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட உள்ளது. மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எவாலியாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் இந்த எம்பிவி காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் 75 பிஎஸ் பவரையும், 185 என்எம் டார்க்கையும் அளிக்கும். நாடு முழுவதும் உள்ள 130 டீலர்கள் மூலம் புதிய ஸ்டைல் எம்பிவி விற்பனை செய்யப்படும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
மாருதி எர்டிகா ரூ.7.87 லட்சம் விலையிலும், செவர்லே என்ஜாய் ரூ.6.85 லட்சம் விலையிலும், நிசான் எவாலியா ரூ.8.70 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படும் நிலையில், ஸ்டைல் எம்பிவி ரூ.7.50 லட்சம் ஆரம்ப விலையில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








