மெர்சிடிஸ் பென்ஸ் - அஸ்டன் மார்ட்டின் இடையில் மலர்ந்த புது உறவு!!

தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்காக மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் அஸ்டன் மார்ட்டின் இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்த புதிய கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இரு நிறுவனங்களுக்கும் இடையில் தற்போது முறைப்படி ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்களின் தயாரிப்பு நுட்பங்களை அஸ்டன் மார்ட்டின் பெற முடியும்.

Aston Martin SUV

இந்த கூட்டணியில் புதிய வி8 எஞ்சின் தயாரிக்கப்பட உள்ளது. இது அடுத்த தலைமுறை அஸ்டன் மார்ட்டின் கார்களில் பயன்படுத்தப்படும். இதுவரை ஃபோர்டு நிறுவனத்தின் பழைய தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின்களையே அஸ்டன் மார்ட்டின் பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த கூட்டணியின் அடிப்படையில் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மெர்சிடிஸ் பென்ஸ் தாய் நிறுவனமான டெய்ம்லர் பெற உள்ளது. இதன்மூலம், அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் ஓட்டளிக்கும் உரிமையையும், மேற்பார்வை அந்தஸ்தையும் பெற முடியும்.

மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி பிளாட்ஃபார்மில் அஸ்டன் மார்ட்டினின் வாண்டேஜ் மற்றும் ரேபிட் கார்கள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. கைவிடப்பட்ட அஸ்டன் மார்ட்டினின் லகோண்டா எஸ்யூவி கான்செப்ட்டையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

இதுகுறித்து அஸ்டன் மார்ட்டின் வெளியிட்ட அறிக்கையில்," நூற்றாண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில், இரண்டாம் நூற்றாண்டுக்கான பிரகாசமான, ஒளிமயமிக்கதாக அடியெடுத்து வைக்க இந்த புதிய ஒப்பந்தம் உதவும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு செயல் திறன் மிக்க சொகுசு விளையாட்டு ரக கார்களை வழங்க முடியும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2013, 17:18 [IST]
English summary
The Aston Martin and Mercedes-Benz partnership has at last fallen into place, with the two automakers announcing a formal technical partnership. Back in July, the British and the German automakers had initiated the process with the signing up of a Letter of Intent, which has now come to fruition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+