அதுல் ஆட்டோவின் புதிய டீசல் ஆட்டோரிக்ஷா அறிமுகம்

395சிசி 4 ஸ்ட்ரோக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ஆட்டோரிக்ஷா அதிக எரிபொருள் சிக்கனம் கொடுக்க வல்லதாக அதுல் ஆட்டோ தெரிவித்துள்ளது. டூவல் டோன் இன்டிரியர், ஸ்டைலான டேஷ்போர்டு உள்ளிட்ட அம்சங்களுடன் வந்திருக்கிறது.
இதுகுறித்து அதுல் ஆட்டோ நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் பால் சாச்சாரியா கூறுகையில்," கேரளாவில் ஆட்டோரிக்ஷா முக்கிய போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது. எனவேதான், தேசிய அறிமுகத்தை கேரளாவில் நடத்தியிருக்கிறோம்.
எரிபொருள் சிக்கனம், அதிக பிக்கப், நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டதாக இந்த ஆட்டோரிக்ஷாவை களமிறக்குகிறோம்," என்றார்.
பியோஜியோ அபே, மஹிந்திரா ஆல்ஃபா உள்ளிட்ட பயணிகள் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இந்த புதிய ஆட்டோரிக்ஷா நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








