கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஆடி ஏ6 அறிமுகம்

By Saravana

இந்தியாவில் 6,000 ஆடி ஏ6 சொகுசு செடான் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஏ6 செடான் காரை ஆடி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கீ லெஸ் என்ட்ரி, அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட், 8 ஏர்பேக்குகள், அடாப்ட்டிவ் ஏர் சஸ்பென்ஷன், போஸ் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம், புதிய மல்டிமீடியா இன்டர்பேஸ் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது.

Audi A6 Sedan

2.0 லிட்டர் டிடிஐ மற்றும் 3.0 லிட்டர் டிடிஐ ஆகிய இரண்டு டீசல் மாடல்களில் கிடைக்கும். ஸ்பெஷல் எடிசன் ஏ6 அறிமுக விழாவில் பேசிய ஆடியின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் பெர்ஷகே," ஆடி ஏ6 வெற்றிகரமான மாடலாக மாறுவதற்கு ஆதரவளித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த கார் உலகின் சிறந்த கார் விருதை பெற்ற மாடல். சரியான சமயத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதுகிறேன். மேலும், ஆடி ஏ8 சொகுசு செடான் காரில் இருப்பதற்கு இணையான வசதிகள் தற்போது ஏ6 காரிலேயே கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை இலக்காக கொண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2013, 16:44 [IST]
English summary
Now that 6000 Audi A6 luxury saloons have been sold in India, thus proving its popularity, the automaker has decided make things slightly more exclusive, at least for a limited period of time, with the launch of the special edition Audi A6.
மேலும்... #audi #a6 #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+