சொகுசு கார் மார்க்கெட்டில் நாங்கதான் நம்பர்-1: ஆடி சூசகம்

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்த நிலையில், முதல் இடத்தை தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் இந்த மூன்று நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் பிஎம்டபிள்யூவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துவிட்டதாக ஃபேஸ்புக்கில் ஆடி சூசகமாக தெரிவித்துள்ளது.
நம்பர்-1 இடத்தை பிடிக்க உதவிய ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்துள்ளது ஆடி. ஆனால், கடந்த ஆண்டு கார் விற்பனை விபரங்களை ஆடி வெளியிடவில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனை விபரங்களை வெளியிட்ட பின் ஆடி தனது விற்பனை குறித்த தகவல்களை வெளியிடும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








