பெர்ஷகே விடை பெறுகிறார்: ஆடியின் புதிய தலைவராகிறார் ஜோ கிங்

By Saravana

வரும் 1ந் தேதி முதல் ஆடி இந்தியாவின் புதிய தலைவராக ஜோ கிங் பொறுப்பேற்கிறார்.

ஆட்டோமொபைல் துறையில் 23 ஆண்டு காலம் அனுபவமிக்கவர் ஜோ கிங். கடந்த 1990ம் ஆண்டு டொயோட்டாவில் பணியில் சேர்ந்தார். அடுத்து ஆஸ்திரேலிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

இப்போது ஆஸ்திரேலியாவின் ஆடி சிட்னி மையத்தின் டீலர் பிரின்சிபலாக இவர் பொறுப்பு வகித்து வந்தார். இதைத்தொடர்ந்து, சவால்களும், போட்டிகளும் நிறைந்த இந்திய கார் மார்க்கெட்டிற்கு வருகிறார்.

குறுகிய காலத்தில் நம்பர்- 1 கார் தயாரிப்பாளர் அந்தஸ்தை பெற்றுள்ள ஆடியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பை அவர் ஏற்க உள்ளார்.

இதனிடையே, இதுவரை ஆடி இந்தியா தலைவராக இருந்து வந்த மைக்கேல் பெர்ஷகே கட்டமைப்பு மற்றும் வர்த்தக மேலாண்மைப் பிரிவு தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.

Michael Perschke

கடந்த 2010ம் ஆண்டு ஆடி இந்தியாவின் தலைவராக பொறுப்பேற்ற மைக்கேல் பெர்ஷகே ஆடியை புதிய உயரங்களை தொடச் செய்த பெருமை கொண்டவர்.

2010ல் ஆண்டுக்கு 3000 கார்களை விற்பனை செய்து வந்த ஆடி குறுகிய காலத்தில் ஆண்டுக்கு 9000 கார்கள் வரை விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 27, 2013, 14:39 [IST]
English summary
Audi India will be headed by Joe King starting from September 1st. Michael Perschke meanwhile, has been moved to the role of Head of Network Strategy and Business Management in Audi AG, back in Germany.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+