ஆர்8 கார் வடிவில் பென் டிரைவ்: ஆடி அறிமுகம்
சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஆர்8 வி10 காரின் மினியேச்சர் வடிவிலான யுஎஸ்பி பென் டிரைவ் ஒன்றை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோமொபைல் பிரியர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பென் டிரைவ் 4 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது.
ஆடி ஆர்8 வி10 காரின் 1:72 என்ற விகிதத்தில் வடிவமைக்கபட்ட இந்த ஸ்கேல் மாடல் பென் டிரைவை யுஎஸ்பி போர்ட்டுடன் இணைத்தவுடன் இதிலிருக்கும் ஹெட்லைட்டுகள் ஒளிரும். ரூ.3.299 விலையில் இந்த புதிய பென் டிரைவை ஆடி இந்தியா விற்பனைக்கு விட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆடி டீலர்களிலும் இந்த பென் டிரைவ் கிடைக்கும். படத்தில் ஆடி ஆர்8 வி10 காரின் மினியேச்சர் போன்ற யுஎஸ்பி பென் டிரைவின் படத்தை காணலாம்.



Click it and Unblock the Notifications








