குறைந்த விலை க்யூ3 எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வந்த ஆடி
ரூ.24.99 லட்சம் ஆரம்ப விலையில் ஆடி க்யூ3 எஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. க்யூ3 எஸ்யூவியில் இருக்கும் பல வசதிகளை குறைத்து இந்த காரை குறைந்த விலை கொண்ட பேஸ் மாடலாக கொண்டு வந்துள்ளது ஆடி.
உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவுரங்காபாத் ஆலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படுகிறது. குவாட்ரோ ஆல் வீல் டிரைவ், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகியவை இருக்காது. ஆடி கார்களுக்கே உரித்தான பகல் நேர ரன்னிங் விளக்குகளும் மிஸ்ஸிங்.

இந்த காரில் 142 பிஎஸ் பவரை அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும். 0-100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 17.71 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று கூறுகிறது.
லெதர் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங், குரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கன்ட்ரோல் வசதியுடன் கூடிய மல்டிமீடியா மற்றும் ஆப்ஷனலாக ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்களுடன் கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ், விரைவில் வரும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களுடன் இந்த பேஸ் மாடல் க்யூ3 எஸ் கார் போட்டி போடும்.
ஆன்லைனிலும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முதலில் முன்பதிவு செய்யும் 10 வாடிக்கையாளர்களுக்கு ஆஃப்ரோடு ஆக்சஸெரீஸ் பேக்கேஜ் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








