க்யூ3யைவிட குறைவான விலையில் வரும் புதிய ஆடி எஸ்யூவி!

ஆடியின் தயாரிப்புகளில் க்யூ3 எஸ்யூவி மாடல் தற்போது குறைந்த விலை மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆடியின் விற்பனையில் க்யூ வரிசை எஸ்யூவிகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்தியாவில் கூட க்யூ3 எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களால் ஆடி நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை தற்காலிமாக போக்கிக் கொள்ளும் விதத்தில் இந்தியாவில் க்யூ3 எஸ் என்ற பேஸ் மாடல் க்யூ3 எஸ்யூவியை சமீபத்தில் ஆடி விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், போட்டியாளர்களால் குறைந்த விலை சொகுசு கார் மார்க்கெட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விலை குறைவான புதிய சொகுசு எஸ்யூவி மாடலை ஆடி அறிமுகம் செய்கிறது.

புது எஸ்யூவி

புது எஸ்யூவி

க்யூ 1 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி மாடலை ஆடியின் உயரதிகாரி ஸ்டேட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் புதிய க்யூ1 எஸ்யூவியின் டீசரையும் வெளியிட்டுள்ளனர்.

 6வது மாடல்

6வது மாடல்

ஆடியின் க்யூ வரிசை எஸ்யூவி மாடல்களில் 6வது மாடலாக புதிய க்யூ1 எஸ்யூவி இணைகிறது. மேலும், க்யூ வரிசையில் மிக குறைந்த விலை மாடலாகவும் இருக்கும். க்யூ வரிசையில் க்யூ3, ஆர்எஸ் க்யூ3, க்யூ5, எஸ்க்யூ5, க்யூ7 ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஆடியின் புதிய ஏ1 கார் வடிவமைக்கப்படும் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவியும் வடிவமைக்கப்பட உள்ளது.

 4 மீட்டர் எஸ்யூவி

4 மீட்டர் எஸ்யூவி

சொகுசு பி செக்மென்ட்டில் வரும் இந்த புதிய எஸ்யூவி 3,800 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும். ஆடியின் முதல் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவியாக இது வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது கிடையாது

அது கிடையாது

ஆடி எஸ்யூவிகளில் இடம்பெற்றிருக்கும் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்காது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 1.4 லிட்டர் TFSI பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என்று தெரிகிறது. டாப் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் வரும் வாய்ப்புள்ளது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் என ஆடி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு எப்போது?

இந்தியாவுக்கு எப்போது?

2016ம் ஆண்டு இந்த புதிய ஆடி க்யூ1 எஸ்யூவி ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய எஸ்யூவி மூலம் குறைந்த விலை கொண்ட சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடியும் இணைய இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2013, 15:23 [IST]
English summary
Audi has officially confirmed the Q1, a crossover model that the German luxury automaker will manufacturer starting from 2016 in its Ingolstadt facility. The announcement is accompanied with a teaser image of a concept car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+