முதல் நாளில் 125 முன்பதிவுகளை பெற்ற ஆடி க்யூ3 எஸ்
விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே ஆடி க்யூ3 எஸ் எஸ்யூவிக்கு 125 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சொகுசு கார் மார்க்கெட்டில் மிக அதிகபட்சமாக அளவாக இது பார்க்கப்படுகிறது. க்யூ3 எஸ்யூவியின் வசதிகள் மற்றும் விலை குறைக்கப்பட்ட மாடல்தான் க்யூ3 எஸ். ரூ.24.99 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பென்ஸ் ஏ கிளாஸ், பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தற்காலிகமாக போக்குவதற்காகவே இந்த வசதிகள் குறைக்கப்பட்ட மாடலை ஆடி அவசரமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ஆடியின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் விற்பனைக்கு வந்த முதல் நாளான நேற்று மட்டும் 125 பேர் இந்த புதிய க்யூ3 எஸ் மாடலுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
இது ஆடியின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில், மூன்றாம் இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்த ஆடிக்கு தற்போது பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் கார்களால் நெருக்கடி ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னடவை க்யூ3 எஸ் சரிகட்டும் என்று ஆடிக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.


Click it and Unblock the Notifications








