தீப்பிடித்து கருகிய ரூ.2 கோடி ஆடி கார்: மும்பையில் பரபரப்பு
மும்பையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஆடி ஆர்8 கார் நேற்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், மும்பை கடல் வழி பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் நேற்று சூப்பர் கார் அணிவகுப்பு நடந்தது. இதில், ஃபெராரி, போர்ஷே, ஆடி, பென்ட்லீ உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் சூப்பர் கார்கள் பங்கேற்றன.
இந்த நிலையில், அணிவகுப்பில் வந்ததாக கூறப்படும் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று மும்பை வோர்லி-பந்த்ரா இடையிலான கடல் பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதனைக்கண்ட காரில் இருந்த 2 பேர் உடனடியாக காரை விட்டு வெளியேறிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. தகவலறிந்து தீயணைப்புப் படையினர் வருவதற்குள் கார் முழுவதும் கருகி நாசமாகிவிட்டது.
தீயில் கருகிய ஆடி ஆர்8 கார் ரூ.2 கோடி மதிப்புடையது. இதுகுறித்து சூப்பர் கார் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள்," தீப்பிடித்து எரிந்த கார் அணிவகுப்பில் பங்கேற்க முறைப்படி பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்," தீப்பிடித்து எரிந்த காரை எங்கள் வசம் எடுத்துள்ளோம். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
முதல் கட்ட விசாரணையில், தீப்பிடித்த காரில் சில கஸ்டமைசேஷன்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுவே தீப்பிடித்ததற்கான காரணமாக இருக்கலாம்," என்று கூறினார்.
படத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருக்கும் ஆடி ஆர்8 காரையும், உண்மையிலேயே அந்த கார் எப்படியிருக்கும் என்பதையும் காண ஸ்லைடருக்கு வாருங்கள்.

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

மும்பையில் தீப்பிடித்து எரிந்த ஆடி கார்

ஆடி ஆர்8 கார் படங்கள்

ஆடி ஆர்8 கார் படங்கள்

ஆடி ஆர்8 கார் படங்கள்

ஆடி ஆர்8 கார் படங்கள்

ஆடி ஆர்8 கார் படங்கள்



Click it and Unblock the Notifications








