எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்த ஆடி!

By Saravana

அதிசக்திவாய்ந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் கைவிடுவதாக ஆடி அறிவித்தது. ஆடியின் டிசைன் தலைவராக இருந்த வோல்ப்கேங் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காருக்கு தேவையான அதிக திறன் கொண்ட பேட்டரி தயாரிப்புக்கு அதிக செலவிட வேண்டியிருப்பதால், தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படாது என்று கூறி கைவிடுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், ஆடி டிசைன் பிரிவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள உல்ரிச் ஹாக்கென்பெர்க் ஆர்8 இ ட்ரோன் என்ற இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளார். ஒருமுறை சார்ஜ் செய்தால் 215 கிமீ தொலைவு செல்லத்தக்கதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் தற்போது 400 கிமீ தூரம் செல்லத்தக்க வகையில் இருக்கும்.

Audi E Tron

இதற்காக, புதிய தொழில்நுட்பம் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 376 எச்பி திறனையும், 819 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

0- 100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

ஆடியின் புதிய டிசைன் பிரிவு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உர்ரிச்தான் ஃபோக்ஸ்வேகனின் 111 கிமீ மைலேஜ் தரும் எக்ஸ்எல்1 காரையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2013, 11:35 [IST]
English summary
Plans to build a production version of the Audi R8 e-tron, the advanced all-electric R8 sports car was dropped entirely earlier this year. Audi had claimed that the technology just wasn't available to build a high performance production car of the R8's caliber.
மேலும்... #audi #r8 #four wheeler #ஆடி #ஆர்8
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+