அதிவேகத்தில் பறந்து வந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆடி கார்!
ஆடியின் ஆர்8 வரிசையில் கூடுதல் பவர் கொண்ட ஆர்8 வி10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் புதிய ஆர்-8 காரை ஆடி அறிமுகம் செய்தது. தற்போது ஆர்8 வி8 கூபே, ஆர்8 வி10 கூபே மற்றும் ஆர்8 வி10 ஸ்பைடர் ஆகிய மாடல்கள் விற்பனையில் உள்ளன.
இந்த வரிசையில், அதிக பவர்ஃபுல் மாடலாக ஆர்8 வி10 ப்ளஸ் ஸ்போர்ட்ஸ் கார் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பார்முலா-1 பந்தய களத்தில் நடந்த விழாவில் இந்த கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், இந்த பவர்ஃபுல் காரை தமிழகத்தை சேர்ந்த பார்முலா-1 வீரர் கருண் சந்தோக் அசுர வேகத்தில் ஓட்டி வந்து அனைவரையும் கவர்ந்தார். புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பந்தய களத்தின் ஒரு சுற்றை வெறும் 2:12.711 நிமிடங்களில் அந்த கார் கடந்தது.
இந்த காரில் லம்போர்கினியின் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 550 பிஎச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும். 3.5 வினாடிகளில் 0-100கிமீ வேகத்தை தொட்டுவிடும். மணிக்கு அதிகபட்சம் 317கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ரூ.20,595,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா

ஆர்8 வி10 ப்ளஸ் அறிமுக விழா



Click it and Unblock the Notifications








