ஆடி அல்ட்ரா டிடி குவாட்ரோ கான்செப்ட் கார் - எடை 1111 கிலோ மட்டுமே
ஆடியின் புதிய டிடி அல்ட்ரா குவாட்ரோ கான்செப்ட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலகு எடை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கான்செப்ட் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பிரத்யேக வொர்த்தர்சீ விழாவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
டிடி எஸ் காரைவிட 300கிலோ எடை குறைந்த இந்த காரின் பவரும் 100 பிஎச்பி கூடுதல் என்பது சிறப்பு. இதில், பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் 306 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 278கிமீ.

வொர்த்தர்சீ விழா சிறப்பு
1981ம் ஆண்டு முதல் ஆஸ்திரிய நாட்டின் ரெஃப்னிட்ஸ் நகரிலுள்ள வொர்த்தர்சீ ஏரியின் அருகே இந்த பிரத்யேக ஆட்டோ ஷோவை ஃபோக்ஸ்வேகன் குழுமம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் 8ந் தேதி முதல் 11ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

ஆடி டிடி அல்ட்ரா குவாட்ரோ
இந்த கான்செப்ட் கார் மொத்தம் 1,111 கிலோ மட்டுமே எடை கொண்டது. தற்போது உற்பத்தியில் இருக்கும் ஆடி டிடி காரை விட 300 கிலோ எடை குறைவு.

கார்பன் ஃபைபர்
பாகங்கள் கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பாலிமர் மற்றும் மெக்னீசியம் பயன்படுத்தப்பட்டிருப்பதே எடை குறைவுக்கு காரணம்.

ஃபைபர் கிளாஸ்
பக்கெட் இருக்கைகள் மற்றும் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனில் ஃபைபர் கிளாஸ் ரீஇன்போர்ஸ்டு பாலிமர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வசதிகள்
எலக்ட்ரோமெக்கானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரிக் கன்ட்ரோல் பவர் விண்டோ, நவீன வசதிகள் கொண்ட ஏசி ஆகியவை ஆடி டிடி காரிலிருந்து அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
ஆடியின் டிடி அல்ட்ரா குவாட்ரோ கான்செப்ட் காரில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 310 எச்பி சக்தியையும், 400என்எம் டார்க்கையும் வழங்கும்.

உந்துசக்தி
ஆடி டிடி காரைவிட இந்த கான்செப்ட் கார் 1.3 வினாடிகளில் குறைவான நேரத்தில் 0-100கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








