பிராங்க்ஃபர்ட்டில் ஆடியின் முதல் எம்பிவி கார் அறிமுகம்?

அடுத்த மாதம் பிராங்க்ஃபரட் மோட்டார் ஷோவில் முதல் எம்பிவி காரின் கான்செப்ட்டை ஆடி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடியின் ஏ3 செடான் அடிப்படையில் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது.

சொகுசு கார் மார்க்கெட்டில் செடான், எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் ஆடியின் முதல் எம்பிவி கார் என்பதால் இந்த காரின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

செடான் அடிப்படையில்...

செடான் அடிப்படையில்...

ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி பிளாட்பார்மில் ஏ3 செடான் காரின் டிசைன் தாத்பரியத்திலேயே இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த கார் வி4 என்ற பெயரில் வரும் என்று தெரிகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார் 7 சீட்டர் மற்றும் 5 சீட்டர் மாடல்களில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய எம்பிவி பெட்ரோல் மற்றும் டீசலில் வர இருக்கிறது. இந்த புதிய எம்பிவியில் 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 222 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினுடன் வர இருக்கிறது. இதுதவிர, ஹைபிரிட் மாடலும் வர இருக்கிறது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 107 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டிருக்கும்.

விற்பனைக்கு...

விற்பனைக்கு...

வரும் 2016ம் ஆண்டில் ஆடியின் புதிய எம்பிவி மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2013, 14:41 [IST]
English summary
Audi to unveil of its first MPV concept model in Frankfurt motor show by next month, reports says.
மேலும்... #audi #four wheeler #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+