அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் ஆர்இ60!

இருசக்கர, மூன்று சக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற குவாட்ரிசைக்கிள் ரக பயணிகள் வாகனத்தை வடிவமைத்துள்ளது.
இந்த புதிய குவாட்ரிசைக்கிள் பயணிகள் வாகனத்தை வர்த்தக மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.
இதையடுத்து, புதிய ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை பஜாஜ் ஆட்டோ தீவிரப்படுத்தியிருக்கிறது.
வரும் அக்டோபர்- மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் இந்த புதிய வாகனத்தை விற்பனைக்கு விடவும், அதற்கு வசதியாக உற்பத்தியை துவங்கவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது பஜாஜ் ஆட்டோ.


Click it and Unblock the Notifications








