பஜாஜ் ஆர்60க்கு பெரும் நெருக்கடி காத்திருக்கிறது!

ஏனெனில், பல முன்னணி நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன.
இதனால், பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு பெரும் நெருக்கடி விரைவிலேயே ஏற்படும் என கருதப்படுகிறது.
மேலும், வர்த்தக மார்க்கெட்டில் மட்டும் குவாட்ரிசைக்கிளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பஜாஜ் ஆட்டோவின் விற்பனை இலக்கை ஆர்இ60 எட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது போலரிஸ், மஹிந்திரா, பியாஜியோ ஆகிய நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
ஆனால், அரசு வகுக்கும் விதிமுறைகளை பொறுத்தே தங்களது தயாரிப்புகளை இங்கே விற்பனைக்கு கொண்டு வர முடியும் என கூறியிருக்கின்றன.
ஒருவேளை, போலரிஸ், மஹிந்திரா, பியாஜியோ ஆகிய நிறுவனங்கள் குவாட்ரிசைக்கிள்களை வரிசை கட்டினால் ஆர்இ60யின் விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








