டீசல் மைக்ராவுக்கு ஒரு லட்சம் தள்ளுபடி : பெங்களூர் டீலர் அதிரடி
டீசல் மைக்ரா காருக்கு ஒரு லட்சம் தள்ளுபடி வழங்குவதாக பெங்களூரிலுள்ள நிசான் டீலர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் நிசான் மைக்ரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், மைக்ராவின் டீசல் மாடல் விலை அதிகமிருப்பதால் போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாமல் விற்பனையில் பின்தங்கியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக மைக்ராவின் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் 608 மைக்ரா கார்களும், மார்ச்சில் 468 மைக்ரா கார்களும், ஏப்ரலில் 335 மைக்ரா கார்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
போனியாகததால் டீலர்களில் மைக்ரா காரின் இருப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, இருப்பை குறைக்கும் விதமாக பெங்களூரிலுள்ள ஷாஹவர் நிசான் என்ற டீலர் டீசல் மைக்ராவுக்கு ஒரு லட்சம் தள்ளுபடி அறிவித்துள்ளது. நேரடி தள்ளுபடியாக ரூ.50,000, எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டீசல் மைக்ரா எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமியம் ஆகிய இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், எக்ஸ்வி ரூ.7.51 லட்சத்திலும், எக்ஸ்வி பிரிமியம் ரூ.8.06 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி தள்ளுபடி மூலம் எக்ஸ்வி ரூ.6.51 லட்சத்திலும், எக்ஸ்வி பிரிமியம் ரூ.7.06 லட்சத்திலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








