குறைவான விலையில் புதிய என்ட்ரி லெவல் கார்: பென்ட்லீ பரிசீலனை

By Saravana

விற்பனையை அதிகரிக்கும் விதமாக புதிய என்ட்ரி லெவல் காரை அறிமுகப்படுத்த பென்ட்லீ பரிசீலித்து வருகிறது. ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு நேரடி போட்டியாளராக வர்ணிக்கப்படும் ஆடம்பர கார் நிறுவனமான பென்ட்லீ தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பென்ட்லீ தலைவர் வோல்ஃப்கேங் ஸ்ரெய்பர் தலைமையில் சமீபத்தில் டிசைன் வல்லுனர்களுடன் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செக்மென்ட்

புதிய செக்மென்ட்

புதிய என்ட்ரி லெவல் பென்ட்லீ கார் 4 கதவுகள் கொண்ட கூபே மாடலாக இருக்கும். முல்சான் மற்றும் கான்டினென்டல் ஜிடி கார்களுக்கு கீழே நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

 தயாரிப்பு நிலை

தயாரிப்பு நிலை

2018ம் ஆண்டில் இந்த புதிய கார் தயாரிப்பு நிலையை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 5,000 முதல் 6,000 கார்கள் விற்பனை இலக்குடன் அறிமுகம் செய்யப்படும்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஆடி டி5 பிளாட்ஃபார்ம் மற்றும் போர்ஷே எம்எஸ்பி பிளாட்ஃபார்ம் ஆகிய இரண்டில் ஒன்றில் இந்த புதிய காரை வடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதில், போர்ஷே எம்எஸ்பி பிளாட்ஃபார்மில் வடிவமைப்பது சிறப்பாக இருக்கும் என பென்ட்லீ டிசைன் பிரிவு நிபுணர்கள் கருத்து தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 விலை

விலை

இந்த புதிய என்ட்ரி லெவல் பென்ட்லீ கார் ஒரு கோடி விலை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிஎம்டபிள்யூ எ6 கிரான் கூபே மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் 63 ஏஎம்ஜி கார்களுக்கு போட்டியை தரும் வகையில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2013, 13:19 [IST]
English summary

 As much as luxury car makers such as Bentley would like to continue catering to a niche market, the hard truth is that for them to be profitable they need to extend their offering into high volume segment. The sort of mass market sales that is associated with brands such as Audi or Mercedes, where sales reach a few thousands units on a regular basis, instead of just a few hundreds.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+