ராலி பந்தய கொண்டாட்ட ஸ்பெஷல் பென்ட்லீ முல்சான் அறிமுகம்!
லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் ராலி பந்தயம் துவங்கி 90 ஆண்டுகள் ஆவதையொட்டி, கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் முல்சான் கார்களை பென்ட்லீ அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெறும் பெபிள் பீச் கான்கர்ஸ் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார்கள் அறிமுகமாயின. லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் ராலி பந்தயத்தில் வெற்றி தேடித் தந்த தங்களது டிரைவர்களின் பெயர்களில் மொத்தம் 6 ஸ்பெஷல் எடிசன் முல்சான் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பென்ட்லீ கூறியிருக்கிறது.

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட லெதர் சீட் கவர்கள் மற்றும் டோர் பேனல்கள், டிரில்டு அலாயில் தயாரிக்கப்பட்ட பெடல்கள், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங், கருப்பு நிற 5 ஸ்போக் அலாய் வீல்கள் என மிக அசத்தலான அம்சங்களை இந்த 6 கார்களும் கொண்டிருக்கும். இந்த காரின் விலை விபரங்கள் வெளியிடப்படவில்லை.

டட்லி பென்ஜஃபீல்டு வீரரின் பெயரில் பச்சை வண்ண முல்சானும், வோல்ஃப் பர்னாட்டோ பெயரில் கிரானைட் வண்ண முல்சானும், டிம் பர்கின் பெயரில் வெள்ளை நிற முல்சானும், கிளென் கிட்ஸ்டன் பெயரில் அடர் நீல நிற முல்சானும், கய் ஸ்மித் பெயரில் பெலுகா என்ற பிரத்யேக வெள்ளை நிற முல்சானும் விற்பனை செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








