தென் இந்தியாவில் பென்ட்லீ கார்கள் உலா!
தென் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சுற்றுலாவை பென்ட்லீ வழங்குகிறது. இதற்காக, பென்ட்லீயின் கான்டினென்டல் ஜிடி மற்றும் முல்சான் கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெங்களூர், சென்னை, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சிறப்பு சுற்றுலாவை பென்ட்லீ வழங்குகிறது. மேலும், இந்த சுற்றுலாவின்போது சாகச டிரைவிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை பென்ட்லீ ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் 1ந் தேதி துவங்கிய இந்த சுற்றுலா நாளை மறுதினம் முடிவடைகிறது.

கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12
இந்த காரில் 575 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சொகுசு மற்றும் பவர் என இரண்டும் ஒருங்கே வழங்கவல்ல இந்த ஆடம்பர கார் வாடிக்கையாளர்களின் டிரைவிங் அனுபவத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும்.

கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12
வெறும் சுற்றுலா என்றில்லாமல் இந்த காரின் தொழில்நுட்பங்களுக்கும், திறனுக்கும் முழு வேலை கொடுக்கும் விதத்தில் சாகச நிகழ்ச்சிக்களும் நடந்து வருகின்றன.

பென்ட்லீ முல்சான்
கான்டினென்டல் ஜிடி காரை விட கொஞ்சம் பவர் குறைவான இந்த காரும் சொகுசு அம்சங்களுக்கு சளைத்ததல்ல. இந்த காரில் 6.7 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெரும் வரவேற்பு
இதுகுறித்து பென்ட்லீயின் அதிகாரப்பூர்வ டீலர் எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சத்ய பாக்லா கூறுகையில்,"இதற்கு முன் இதுபோன்று நடத்தப்பட்ட சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோன்று, தற்போது நடந்து வரும் சுற்றுலாவுக்கும் வாடிக்கையாளர்கள் பேராதரவு கொடுத்துள்ளனர். புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு இந்த சுற்றுலா திட்டம் உதவிகரமாக இருக்கும்,"என்றார்.


Click it and Unblock the Notifications








