உலகின் அதிவேக 4 சீட்டர் கன்வெர்ட்டிபிளை அறிமுகப்படுத்தும் பென்ட்லீ

உலகின் அதிவேக 4 சீட்டர் கன்வெர்ட்டிபிள் காரை அமெரிக்காவின் டெட்ராய்டில் நடைபெற இருக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் வரும் 14ந் தேதி பென்ட்லீ அறிமுகப்படுத்த உள்ளது. கான்டினென்டல் ஜிடி வரிசையில் வரும் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் கார் ஓட்டுதல் தரம், வேகம், சொகுசு என அனைத்து விதத்திலும் புதிய அனுபவத்தை வழங்கும் என பென்ட்லீ தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அறிமுகமான கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் மாடலின் திறந்து மூடும் கூரையுடன் வரும் இந்த புதிய காரை பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

616 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டிவின் டர்போசார்ஜ்டு டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4.4 வினாடிகளில் 100 கிமீ., வேகத்தை எட்டும் ஆற்றல் படைத்தது. அதிகபட்சம் மணிக்கு 325 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

லெதர் இருக்கைகள்

லெதர் இருக்கைகள்

தரமான லெதர் இருக்கைகள் பென்ட்லீயின் கைதேர்ந்த நிபுணர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அலுமினியம் பினிஷிங்

அலுமினியம் பினிஷிங்

டேஷ்போர்டில் டின்ட் அலுமினியம் பினிஷிங் செய்யப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது.

வசீகரமான முகப்பு

வசீகரமான முகப்பு

ஏர்டேக், டார்க் டின்ட் குரோம் கிரில் ஆகியவை முகப்பின் வசீகரத்தை கூட்டுகிறது. 21 இஞ்ச் அலாய் வீல் சில்வர் கலரில் சிலிர்க்க வைக்கிறது. ஆப்ஷனலாக டார்க் டின்ட் அலாய் வீலும் கிடைக்கும்.

பாதுகாப்பான பயணம்

பாதுகாப்பான பயணம்

4 அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கார் - 30 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் வைத்து சோதனை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, எந்தவொரு காலநிலையிலும் பாதுகாப்பான பயணத்துக்கு கியாரண்டி தரும்.

ஆல்வீல் டிரைவ்

ஆல்வீல் டிரைவ்

ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் சிறந்த ஓட்டுதல் தரத்தையும், நிலைத்தன்மையையும் வழங்கும்.

ரோடு கிரிப்

ரோடு கிரிப்

இதன் நவீன டார்க் தொழில்நுட்பம் வளைவில் வேகமாக திரும்பினாலும் சிறந்த நிலைத்தன்மையையும், ரோடு கிரிப்பையும் வழங்கும். மேலும், பனிப் படர்ந்த சாலை, மழைக்காலங்களில் செல்லும்போதும் சிறந்த ரோடு கிரிப்புடன் செல்லும்.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

சமீபத்திய புதிய வசதிகளுடன் பென்ட்லீயின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், மியூசிக் பைல்களை சேமித்து வைக்க 15 ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டிருக்கிறது. ஐபாட் உள்ளிட்ட சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

விற்பனை

விற்பனை

டெட்ராய்ட் ஷோவில் பார்வைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த கார் இன்னும் ஓரிரு மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 2, 2013, 12:36 [IST]
English summary
Bentley Motors is all set to unveil the world's fastest four seat convertible in January. The British luxury carmaker will be revealing the new Continental GT Speed Convertible on 14th of this month during the North American International Auto Show in Detroit, USA.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+