இதுவரை 400 ஏ கிளாஸ் கார்களுக்கு முன்பதிவு... சந்தோஷத்தில் பென்ஸ்

By Saravana

அறிமுகம் செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு 400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு சொகுசு காருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த நாட்களில் அதிக முன்பதிவு கிடைத்திருப்பதால், பென்ஸ் புதிய நம்பிக்கையை பெற்றிருக்கிறது.

பென்ஸ் ஏ கிளாஸ் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து, அந்த காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் பென்ஸ் பரிசீலனை செய்து வருகிறது. இதன்மூலம், பென்ஸ் ஏ கிளாஸ் காரை இன்னும் கொஞ்சம் விலையை குறைத்து விற்பனைக்கு கொண்டு வர முடியும்.

Benz A Class

இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் இதுவரை 90,000 பேருக்கு மேல் ஏ கிளாஸ் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தலைவர் எபர்ஹார்டு கெர்ன் கூறுகையில், இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் இதுவரை எந்த ஒரு காருக்கும் கிடைக்காத வரவேற்பு ஏ கிளாஸ் காருக்கு கிடைத்திருக்கிறது.

அறிமுகம் செய்யப்பட்டு 10 நாட்களில் 400 பேர் முன்பதிவு செய்திருப்பது எங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுப்பதாக அமைந்திருக்கிறது. தற்போது இறக்குமதி செய்யப்பட்டு டெலிவிரி கொடுப்பதால் ஏ கிளாஸ் காருக்கு 3 மாதங்கள் காத்திருப்பு காலம் நீடிக்கிறது," என்றார்.

Most Read Articles
English summary
German Luxury car maker Mercedes Benz has received 400 bookings of their latest launch - A Class Sports hatchback in just 10 days of their launch. 
Story first published: Tuesday, June 11, 2013, 10:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X