நாளை புதிய பென்ஸ் இ கிளாக் மற்றும் கேடிஎம் டியூக் 390 ரிலீஸ்!
நாளை மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய இ கிளாஸ் காரை பென்ஸ் நிறுவனமும், டியூக் வரிசையில் 390 என்ற புதிய 375சிசி பைக்கை கேடிஎம்-பஜாஜ் கூட்டணியும் விற்பனைக்கு கொண்டு வருகின்றன.
2014 பென்ஸ் இ கிளாஸ்
அடுத்தடுத்து புதிய மாடல்களை பென்ஸ் அறிமுகம் செய்து வருகிறது. ஜிஎல் கிளாஸ் எஸ்யூவியை தொடர்ந்து ஏ கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய இ கிளாஸ் காரை நாளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

மறுவடிவமைப்பு பெற்ற புதிய முகப்பு கிரில், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், புதிய டிசைன் கொண்ட ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட மாறுதல்களுடன் வருகிறது. பின்புறம் டெயில் லைட் மற்றும் புகைபோக்கி குழாயில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் மற்றும் கன்ட்ரோல் சுவிட்சுகள் என உள்புறத்திலும் மாற்றங்கள் கண்டுள்ளது. 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 201 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7ஜி-டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கும்.
கேடிஎம் டியூக் 390
டியூக் 200 பைக்கின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நாளை புதிய டியூக் 390 பைக்கை கேடிஎம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த புதிய பைக்கில் 43 பிஎச்பி சக்தியை அளிக்கும் திறன் கொண்ட 375சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த புதிய பைக் பாஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வரும் என தகவல்கள் கூறுகின்றன. ரூ.2.0 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








