மல்டி ஆக்ஸில் அவதாரம் எடுத்த பென்ஸ் ஜி63!
மல்டி ஆக்ஸில் பஸ், டிரக்கை பார்த்த நமக்கு இது கொஞ்சம் புதிதுதான். சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி63 ஆடம்பர எஸ்யூவியின் மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக் மாடலை பென்ஸ் களமிறக்குகிறது. இது 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எஸ்யூவி. எனவே, எந்த சாலையிலும் கண்ணை மூடிக் கொண்டு செல்லலாம்.
ஆஸ்திரியாவில் உள்ள பென்ஸ் ஆலையில் இந்த புதிய மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஜி320 சிடிஐ வாகனத்தின் 6 வீல் டிரைவ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜி63 மல்டி ஆக்ஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 முதல் 30 ஜி63 மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக்குகளை உற்பத்தி செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

பிளாட்பார்ம்
2011முதல் ஆஸ்திரேலிய ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்து வரும் 6 சக்கரங்கள் கொண்ட ஜி வேகன் பிளாட்பார்மில்தான் இந்த மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனி நபர் மார்க்கெட்
ராணுவ பயன்பாட்டில் இருந்து வரும் ஜி 350 எஸ்யூவியின் தனி நபர் பயன்பாட்டு வாகன மாடலாக இந்த பிக்கப் டிரக்கை பென்ஸ் களமிறக்க உள்ளது.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்
இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் வி8 எஞ்சின் 536 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டிரான்ஸ்மிஷன்
இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

மெகா சைஸ்
இந்த எஸ்யூவி 3775 கிலோ எடை கொண்டது

கிரவுண்ட் கிளியரன்ஸ்
இந்த எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக முக்கியமான அம்சம். ஆம், இந்த எஸ்யூவி 460 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

இருக்கை வசதி
ஆடம்பர ரகத்தை இந்த எஸ்யூவியில் கேபினில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். பின்புறம் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பக்கெட் பொருத்தப்பட்டுள்ளது.

சக்கரங்கள்
இந்த எஸ்யூவியில் 37 இஞ்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை
பென்ஸின் இரண்டாவது அதிக விலை கொண்ட மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. 3.50 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








