புனே பென்ஸ் ஆலையில் புதிய இ கிளாஸ் கார் உற்பத்தி துவங்கியது.

புனேயில் உள்ள பென்ஸ் ஆலையில் இ கிளாஸ் காரின் உற்பத்தி துவங்கியது. ரூ.41.5 லட்சம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட பென்ஸ் இ கிளாஸ் கார் கடந்த மாதம் 25ந் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட மாடலாக வந்தது.

இந்த நிலையில், அதிகப்படியான இறக்குமதி வரியை தவிர்ப்பதற்காக இந்த கார் தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இ கிளாஸ் கார்களும் சகன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சகனிலுள்ள பென்ஸ் ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்த முதல் இ கிளாஸ் காரைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 204 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

7 ஜி டிரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

டீசல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் டேங்க் 80 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

 புதிய நேவிகேஷன் சிஸ்டம்

புதிய நேவிகேஷன் சிஸ்டம்

புதிய டிசைனில் ஏசி வென்ட்டுகள், கமாண்ட் ஆன்லைன் நேவிகேஷன் சிஸ்டம், டிவிடி பிளேயர் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய டெயில் கிளஸ்ட்டர், புதிய டேஷ்போர்டு டிசைன், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், கியர் ஷிப்ட் பேடில்களுடன் வந்துள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

ஸ்பிளிட் ஹெட்லைட் அசெம்பிளி, பகல்நேர ரன்னிங் விளக்குகள், புதிய கிரில் ஆகியவை கவர்ச்சியை சேர்க்கிறது.

ஏர்பேக்ஸ்

ஏர்பேக்ஸ்

அதிக பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்த காரில் 8 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

ஆக்டிவ் பார்க் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் பானட், வுட் பினிஷ், நெப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரி, பனரோமிக் சன்ரூஃப் ஆகிய ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் கொண்டிருக்கிறது.

 விலை

விலை

பெட்ரோல் மாடல் விலை ரூ.41.40 லட்சமாகவும், டீசல் மாடல் விலை ரூ.44.48 லட்சமாகவும், லிமிடேட் எடிசன் டீசல் மாடல் விலை ரூ.49.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2013, 13:18 [IST]
English summary
Locally produced Mercedes-Benz E Class Saloon rolls out from its plant in chakan, Pune.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+