சிறந்த மைலேஜ், பட்ஜெட் விலையில் ஹேட்ச்பேக் கார்கள் லிஸ்ட்!!
இன்னும் சில மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் மிக நெருக்கமாக வந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டீசல் காருக்கு செய்ய வேண்டிய கூடுதல் முதலீட்டை தவிர்க்கும் விதத்தில் பலர் பெட்ரோல் கார் வாங்குவதே சிறந்தது என எண்ணத் துவங்கியுள்ளனர்.
இது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் வழியாக தெரிய வந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் டீசல் கார்களை காட்டிலும் பெட்ரோல் கார்களிலும் விற்பனை அதிகரித்துள்ள தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது.
இந்த நிலையில், பெட்ரோல் கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், மார்க்கெட்டில் சிறந்த மைலேஜுடன் பட்ஜெட் விலையிலும்(ரூ.5.50 லட்சத்திற்குள்) கிடைக்கும் பெட்ரோல் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டாடா நானோ
லிட்டர் பெட்ரோலுக்கு 25.4 கிமீ தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
சென்னையில் ரூ.1.90 லட்சம் முதல் ரூ.2.63 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது

மாருதி ஆல்ட்டோ 800
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.
ரூ.3.0 லட்சம் முதல் ரூ.3.91 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மாருதி ஏ ஸ்டார்
லிட்டருக்கு 19.0 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
ரூ.4.61 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

செவர்லே ஸ்பார்க்
லிட்டருக்கு 18.0 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
ரூ.3.88 லட்சம் முதல் ரூ.4.52 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் இயான்
லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
ரூ.3.31 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர்
லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜ் சான்று கூறுகிறது.
ரூ.4.39 லட்சம் முதல் ரூ.5.28 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

செவர்லே பீட்
லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
ரூ.4.54 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

நிசான் மைக்ரா ஆக்டிவ்
லிட்டருக்கு 19.46 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
ரூ.4.05 லட்சம் முதல் ரூ.5.45 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

மாருதி ஆல்ட்டோ கே10
லிட்டருக்கு 20.20 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று கூறுகிறது.
ரூ.3.91 லட்சம் முதல் ரூ.4.05 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் ஐ10
லிட்டருக்கு 20.36 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
1.1 லிட்டர் மாடல் ரூ.4.38 லட்சம் முதல் 5.15 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் கப்பா எஞ்சினுடனும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








