கார்களுக்கான டாப் நேவிகேஷன் மாடல்கள்!

சென்னையில் இருந்தாலும் ஒரு இடத்தில் இருப்பவர்களுக்கு பிற பகுதிகளுக்கு செல்லும்போது வழி தெரியாமல் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் அல்லது அண்டை மாநிலங்களுக்கு செல்லும்போதும் காரை அடிக்கடி நிறுத்தி வழிக்கேட்டுக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது.

இதனை தவிர்க்கும் வகையில், காரை ஓட்டியவாறு யாருடைய துணையும் இல்லாமல் அழகாக போக வேண்டிய இடத்துக்கு ஹாயாக செல்வதற்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம் பயன்படுகிறது. செயற்கைகோள் உதவியுடன் இயங்குவதால் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பெரும்பான்மையான பகுதிகளில் துல்லியமாக செல்ல இந்த சிஸ்டம் மிகந்த பயனளிக்கும்.

கோகோ இண்டியா ஜி35

கோகோ இண்டியா ஜி35

400 நகரங்களின் வரைபடங்கள், 2 மில்லியன் அளவுக்கு குறிப்பிட்ட இடத்தின்(பிஓஐ) துல்லியமான தகவல்களை கோகோஇண்டியாவின் ஜி35 போர்ட்டபிள் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் பெறலாம். அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் இந்த நேவிகேஷன் சிஸ்டத்தில் தகவல்களை மிக எளிதாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.13,500 விலை முதல் கிடைக்கிறது.

மேப்மை இண்டியா ரோடுபைலட்-2

மேப்மை இண்டியா ரோடுபைலட்-2

நீடித்த ஆயுள் கொண்ட பேட்டரியுடன், அழகான வடிவமைப்பு கொண்ட இந்த மாடல் மூலம் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளின் தகவல்களை எளிதாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் வசதி கொண்டிருக்கிறது. அதிக சூரிய வெளிச்சத்தின்போது டச்ஸ்கிரீன் தெளிவாக தெரிவதில்லை என்று புகார் இருக்கிறது. ரூ.8,000 விலையில் கிடைக்கிறது.

 மேப்மை இண்டியா எஸ்-550

மேப்மை இண்டியா எஸ்-550

மல்டிமீடியா வசதியுடன் வழிகாட்டு வசதியையும் ஒருங்கே பெற்ற மாடல் இது. நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த மாடல். நாட்டிலுள்ள 1200 நகரங்கள் மற்றும் இதர பகுதிகளின் தகவல்களை இந்த மாடலிலிருந்து பெற முடியும். 4 இஞ்ச் டச்ஸ்கிரீன், விண்டோஸ் சிஇ 5.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. புளுடூத் வி 2.0 இணைப்பு வசதியும் உண்டு. ரூ.17,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 மேப்மை இண்டியா விஎக்ஸ் 140-எஸ்

மேப்மை இண்டியா விஎக்ஸ் 140-எஸ்

அழகாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடல் இலகு எடை கொண்டது. நேரடி சூரிய வெளிச்சத்தில் இதன் செயல்பாடு திருப்தியாக இல்லை என்பது மைனஸ். ரீசார்ஜபிள் பேட்டரி, போதிய வழிகாட்டு தகவல்களை பெற்றிருப்பது இதன் ப்ளஸ். ரூ.15,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 மேப்மை இண்டியா விஎக்ஸ்-240

மேப்மை இண்டியா விஎக்ஸ்-240

இந்த மாடலும் பொழுதுபோக்கு மற்றும் வழிகாட்டு வசதிகளை ஒருங்கே பெறுவதற்கு சிறந்த மாடல். 2 ஜிபி உள்சேமிப்பு திறன் மற்றும் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 8 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதன் மூலம் ஒரு திரைப்படத்தை இதில் லோடு செய்துகொண்டு பார்க்க முடியும். அதேவேளை, நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு செல்வதற்கான வழிகாட்டு வசதிகளை பெற முடியும். ரிவர்ஸ் கேமராவை இணைத்துக் கொள்ளவும் முடியும். ரூ.17,000 விலையில் கிடைக்கிறது.

 மேம்மை இண்டியா இசட்எக்ஸ்150 டீலக்ஸ்

மேம்மை இண்டியா இசட்எக்ஸ்150 டீலக்ஸ்

இந்தியாவின் பெஸ்ட் நேவிகேஷன் சிஸ்டம் என்ற நன்மதிப்பை பெற்ற மாடல். தகவல்களை எளிதாகவும், சிறப்பாகவும் வழங்கும் மாடல் என்று விருதையும் பெற்றிருக்கிறது. இந்த மாடலில் வரைபடத்தை பெரிது படுத்தி பார்க்கும் வசதி இருக்கிறது. ரூ.19,450 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 சாட்கெய்டு எக்ஸ்-350

சாட்கெய்டு எக்ஸ்-350

பொழுதுபோக்கு மற்றும் வழிகாட்டு வசதிகளை இந்த சாதனத்தில் பெறலாம். தகவல்களை அவ்வப்போது பெறுவதற்கு இதன் பக்கத்தை அடிக்கடி புதுப்பிக்க (ரெஃப்ரெஷ்) வேண்டியிருப்பது மிகப் பெரிய மைனஸ். ரூ.6500 முதல் சாட்கெய்டு நேவிகேஷன் சிஸ்டம் மாடல்கள் கிடைக்கின்றன.

டாம் டாம் வயா 125

டாம் டாம் வயா 125

மார்க்கெட்டில் சிறந்த நேவிகேஷன் மாடல்களில் ஒன்று. 5.0 இஞ்ச் டச் ஸ்கிரீன், ஹேண்ட்ஸ்ப்ரீ அழைப்பு வசதி, லேண்ட்மார்க் நேவிகேஷன் உள்ளிட்ட பல புதிய வசதிகளை கொண்டுள்ளது. சிக்கலான சாலை சந்திப்புகளில் எளிதாக செல்வதற்கு பிரத்யேக வசதிகளை கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளின் தகவல்களை இதன் மூலம் பெறலாம். ரூ.16,000 விலையில் கிடைக்கிறது.

சாட்காப் ஜிபிஎஸ் சிஸ்டம் 5005

சாட்காப் ஜிபிஎஸ் சிஸ்டம் 5005

4.3 இஞ்ச் டிஎஃப்டி டச்ஸ்கிரீன் கொண்ட இந்த மாடல் நவீன வசதிகளை கொண்டிருக்கிறது. நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் இதர பகுதிகளின் சாலைகள் பற்றிய தகவல்களை துல்லியமாக தரும். எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. இதுதவிர, பல்வேறு மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதிகொண்டது. ரூ11,000 விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 8, 2013, 15:35 [IST]
English summary
Satellite navigation systems are slowly gaining popularity and several companies have launched their own sat navs in the market. Here is a look at some of the best satellite navigation systems available in India.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+