ஆட்டோமொபைல் டிவி ஷோவை தொகுத்து வழங்கும் பிளேபாய் மாடல்
றெக்கை கட்டி பறக்கும் ஆட்டோமொபைல் துறையில் ஈடுகொடுக்க புதிய புதிய கொள்கைகளை வகுத்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அனுதினமும் அயராத முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மறுபக்கம் ஆட்டோமொபைல் தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மீடியா துறையும் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க நித்தமும் புதுமைகளை புகுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் டாப் கியர் ஆட்டோமொபைல் நிகழ்ச்சியை ஜெர்மி கிளார்க்சன், ஜேம்ஸ் மே மற்றும் ரிச்சர்டு ஹமன்ட் ஆகியோர் நடத்துவதை பார்த்து பலர் வியந்து பாராட்டுவதுண்டு. ஓவர்டிரைவ், ஆட்டோகார், என்டிடிவி கார் அன்ட் பைக் ஷோ போன்ற ஆட்டோமொபைல் நிகழ்ச்சிகள் இந்திய பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாக திகழ்கின்றன. சில டிவி ஷோக்களை பெண்களும் நடத்துகின்றனர்.
ஆனால், ரஷ்யாவை சேர்ந்த மீடியா ஒன்று அந்நாட்டை சேர்ந்த பிரபல மாடலான இரினாவை வைத்து பிலான்ட்டிவி என்ற பெயரில் ஆட்டோமொபைல் ஷோவை நடத்துகிறது. பிளேபாய் அட்டைப் படத்தை அலங்கரித்த பெருமை கொண்ட பிலான்ட் இந்த ஷோவில் ஒவ்வொரு காரையும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டையும், அங்குலம் அங்குலமாக அளந்து சொல்வதையும் பார்க்கவும், தொகுத்து வழங்குவதை பார்க்க அப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். அவர் நடத்தும் டிவி ஷோ எப்படி இருக்கும் என்பதை ஸ்லைடரில் காணுங்கள்.

எதை பார்க்கிறதுன்னே தெரியலையாம்
லம்போர்கினி கல்லார்டோ சூப்பர்லெகெரா காரை வைத்து இவர் நடத்தும் ஷோவை கண்ட பலர் காரை பார்க்க மறுந்துவிட்டனராம்.

லம்போ கல்லார்டோ சூப்பர்லெகெராவுடன்
அதி சக்தி வாய்ந்த லம்போ கல்லார்டோ சூப்பர்லெகெராவில் 5.2 லிட்டர் எஞ்சின் கொண்டது. இந்த கார் 3.4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

லம்போ கல்லார்டோ சூப்பர்லெகெரா

அஸ்டன் மார்ட்டின் டிபி9
அஸ்டன் மார்ட்டின் டிபி9 காரை கழுவுவது போன்று இவர் வழங்கிய டிவி ஷோவில் பலர் தங்களை மறந்துபோய் நிகழ்ச்சியில் ஐக்கியமாகிவிட்டனராம்.

அஸ்டன் மார்ட்டின் டிபி9 ஷோ

ரோல்ஸ்ராய்ஸ் பேந்தம்
2.5 டன் எடை கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் பேந்தம் காரை பற்றி இவர் விவரித்த விதம் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது.

ரோல்ஸ்ராய்ஸும் தப்பவில்லை
ரோல்ஸ்ராய்ஸ் காரும் இவரது ஷோவில் இடம்பெற்றது. ரோல்ஸ்ராய்ஸ் பேந்தம் காரை பற்றி இவர் விவரித்ததை பார்த்தவர்கள் பேந்த பேந்த விழித்தனராம்.

ஆட்டோமொபைல் ஷோ நடத்தும் ரஷ்ய அழகி

ஆட்டோமொபைல் ஷோ நடத்தும் ரஷ்ய அழகி

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ
4.8 லிட்டர் பொருத்தப்பட்ட இந்த கார் விலை மதிப்பற்றது என்று தனது கருத்தை முத்தாய்ப்பாக வைத்தார் இரினா.

பென்ஸ் ஜி கிளாஸ் டெஸ்ட் டிரைவ்

ஜிஏஇசட் 14 சைக்கா ரஷ்யன் லிமோ



Click it and Unblock the Notifications








