புளூம்பெர்க் டிவி - ஆட்டோகார் விருதை தட்டிச் சென்ற ஈக்கோஸ்போர்ட்!
புளூம்பெர்க் டிவி -ஆட்டோகார் இதழின் 2014ம் ஆண்டின் சிறந்த கார் விருதை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெற்றுள்ளது. இதுதவிர, மேலும் 3 விருதுகளையும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பெற்றது.
புளூம்பெர்க் டிவி - ஆட்டோகார் விருதுகளை 8 நடுவர்கள் அடங்கிய குழு தேர்வு செய்தது. 15 கார்களும், 3 பைக்குளும் இந்த விருது பட்டியலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், பல்வேறு வழியலகுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் சிறந்த கார் மற்றும் பைக்குகளை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
2014ம் ஆண்டின் சிறந்த கார், பைக் மற்றும் எஞ்சின் விருதை பெற்ற மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறந்த கார் விருது: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சிறந்த பைக் விருது: கேடிஎம் டியூக் 390

சிறந்த பிரிமியம் எஸ்யூவி: மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ்

சிறந்த எஸ்யூவி: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சிறந்த செடான்: ஹோண்டா அமேஸ்

சிறந்த காம்பெக்ட் சொகுசு கார்: பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

சிறந்த காம்பெக்ட் கார்: ஹூண்டாய் கிராண்ட் ஐ10

சிறந்த எஞ்சின்: ஃபோர்டு ஈக்கோபூஸ்ட்

சிறந்த கார் தயாரிப்பாளர்: ஹோண்டா கார்ஸ்

ஓட்டுனருக்கான சிறந்த கார்: பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

வாசகர்களுக்கு விருப்பமான கார்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சிறந்த பைக் மாடல்: மஹிந்திரா செஞ்சூரோ

சிறந்த எம்பிவி கார்: செவர்லே என்ஜாய்

சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கார்: போர்ஷே கேமேன் எஸ்

சிறந்த இறக்குமதி கார் மாடல்: ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்

சிறந்த பிரிமியம் பைக்: ஹயோசங் ஜிவி 650 அக்குலா புரோ

சிறந்த இறக்குமதி பைக் மாடல்: கவாஸாகி நின்ஜா இசட்14ஆர்

பணத்திற்கு மதிப்புமிக்க கார்: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறந்த கார்: மஹிந்திரா இ2ஓ

சிறந்த தொழில்நுட்பத்துக்கான விருது: ஃபோர்டு நிறுவனத்தின் அவசர கால தொழில்நுட்பம்

சிறந்த வேரியண்ட்: ஆடி க்யூ3 எஸ்

சிறந்த டிசைன் மற்றும் ஸ்டைல்: மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ்

சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பம்: வால்வோ வி40 காரின் வால்வோ சிட்டி சேஃப்டி பாதுகாப்பு வசதி

சிறந்த சேவை தரும் டீலருக்கான விருது: சாய் சர்வீஸ்(மாருதி கார் டீலர்)


Click it and Unblock the Notifications