பிஎம்டபிள்யூவின் ஹேட்ச்பேக் காரின் சோதனை துவங்கியது!
இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பிஎம்டபிள்யூவின் 1 சீரிஸ் ஹேட்ச்பேக் காரின் சோதனைகள் தற்போது நடந்து வருகிறது. எனவே, ஏற்கனவே தெரிவித்தபடி செப்டம்பரில் இந்த கார் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
பென்ஸ் ஏ கிளாஸ் காரின் ஆன்ரோடு விலை ரூ.30 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில், புதிய பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார் இதைவிட மிக குறைவான விலையில் வர இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த கார் மீது வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சோதனை ஓட்ட படம்
செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் சோதனை ஓட்டங்கள் தற்போது இந்திய மண்ணில் தீவிரமாக நடந்து வருகின்றன.

எஞ்சின்
சர்வதேச அளவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் எக்ஸ்1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 150பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 181 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

பெரிய ஹேட்ச்பேக்
இந்த கார் 4.2 மீட்டர் நீளம் கொண்ட ஹேட்ச்பேக் காராக வருகிறது. எக்ஸ்-3 மற்றும் 3 சீரிஸ் கார்களின் கேபினை ஒத்த தரத்துடன் இருக்கும்.

சென்னையில் உற்பத்தி
இந்த கார் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.எனவே, போட்டியாளர்களைவிட சவாலான விலையில் நிலைநிறுத்தும் வாய்ப்பு உள்ளது.

விலை
ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பென்ஸ் ஏ கிளாஸ் காரைவிட குறைந்த விலையில் வரும் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








