செப்டம்பர் 3ல் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் விற்பனைக்கு அறிமுகம்!
அடுத்த மாதம் 3ந் தேதி பிஎம்டபிள்யூவின் 1 சீரிஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பென்ஸ் ஏ கிளாஸுக்கு போட்டியாக வரும் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் மற்றும் விலை பட்டியலுடன் களமிறங்குகிறது.
பிஎம்டபிள்யூவின் குறைந்த விலை காராக வரப்போகும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். மேலும், அதிக மைலேஜ் தரும் என்பதால் சொகுசு மார்க்கெட்டில் நிச்சயம் பெரிய வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.

எஞ்சின்
சர்வதேச சந்தையில் 136 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 143 பிஎச்பி ஆற்றல் கொண்ட 2.0 லி டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுபாடு இருக்கலாம்.

கிராஸ்ஓவர் டிசைன்
ஹேட்ச்பேக் காராக கூறப்பட்டாலும், பார்ப்பதற்கு சிறிய கிராஸ்ஓவர் போல இருக்கிறது. பென்ஸ் ஏ கிளாஸ் காரை ஒப்பிடுகையில், அதிக இடவசதி கொண்டதாக இருக்கும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.51 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.39 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல், டீசல் என இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

விலை
ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில்தான் இந்த கார் அசெம்பிளிங் செய்யப்பட உள்ளதால், பென்ஸ் ஏ கிளாஸை விட சற்று குறைந்த விலையில் கிடைக்கும் என்பதும் ப்ளஸ் பாயிண்ட்டாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








