ஐ8 காருக்கு ஓர் ஆண்டு வெயிட்டிங் பீரியட்... போர்டு மாட்டிய பிஎம்டபிள்யூ!!

பிஎம்டபிள்யூவின் ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காருக்கு ஓர் ஆண்டுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில்தான் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிசக்திவாய்ந்த ஹைபிரிட் ஸ்போரட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோன்று, ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐரோப்பிய மார்க்கெட்டில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த காருக்கு இதுவரை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக பிஎம்டபிள்யூ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஐ வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களின் மைலேஜ் மற்றும் சிறந்த கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.

தயாரிப்பு திட்டம்

தயாரிப்பு திட்டம்

ஐ8 காருக்கு எவ்வளவு முன்பதிவு கிடைத்திருக்கிறது; ஓர் ஆண்டில் எவ்வளவு கார்கள் திட்டமிடப்பட்டுள்ளது என்பன போன்ற தகவல்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் கார்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஐ8 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3 சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆற்றலை பின்புற சக்கரங்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை முன்புற சக்கரங்களுக்கும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் வழங்கும். பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும் அளிக்கும் வல்லமை கொண்டது. மொத்தமாக 357 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் காராக இது இருக்கிறது.

மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் மிக்க இந்த ஸ்போர்ட்ஸ் கார் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

விலை

விலை

மணிக்கு 250 கிமீ வேகத்தில் திறன்மிக்க இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் 1.36 லட்சம் டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ ஐ3 கார் எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஐ3 கார் எஞ்சின்

பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரில் 172பிஎஸ் பவரையும், 249என்எம் டார்க்கையும் அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் காரில் 2 சிலிண்டர் கொண்ட சிறிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 128 கிமீ முதல் 160 கிமீ வரை பயணம் செய்ய முடியும். பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 300 கிமீ தூரம் வரை செல்லலாம்.

விலை

விலை

ஜெர்மனியில் 29,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22.65 லட்சம்) விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2013, 10:35 [IST]
English summary
BMW has announced i8 hybrid sports car sold out for the next one year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+