இது எலக்ட்ரிக் கார்தானா? - மிரள வைக்கும் பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கார்!

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஐ வரிசையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த மாதம் ஐ வரிசையில் ஐ3 என்ற எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தற்போது ஐ வரிசையில் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அடுத்த மாதம் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த எலக்ட்ரிக் கூபே டிசைன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் சாதாரண கார்களுக்கு இணையான திறன் கொண்டதாக இருக்கிறது. பிஎம்டபிள்யூவின் ஐ8 எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

சிறந்த பெர்ஃபார்மென்ஸை தரும் வகையில், கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இசட்4 கூபே காரின் டிசைன் மற்றும் நீள, அகலத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த காரின் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் 131 எச்பி சக்தியை அளிக்கும் திறன் கொண்டது.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இது பிளக் இன் ஹைபிரிட் கார். எலக்ட்ரிக் மோட்டார் தவிர, டர்போசார்ஜர் துணை கொண்ட 1499 சிசி கொண்ட 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 231 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

விசேஷ டிரான்ஸ்மிஷன்

விசேஷ டிரான்ஸ்மிஷன்

இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து பின்புற சக்கரங்களை இயக்கும். இதுதவிர, ஒருங்கிணைந்த 2 ஸ்டேஜ் டிரான்ஸ்மிஷன் மின் மோட்டார் மூலம் முன்புற சக்கரத்தை இயக்கும். தேவைக்கு ஏற்ப மின் மோட்டாரையும், பெட்ரோல் எஞ்சினையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவும் இயக்க முடியும்.

ஒட்டுமொத்த பவர்

ஒட்டுமொத்த பவர்

மின் மோட்டார், பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டும் சேர்ந்து இயங்கும்போது இந்த கார் 357 எச்பி ஆற்றலையும், 570 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

லித்தியம் அயான் பேட்டரி

லித்தியம் அயான் பேட்டரி

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரி மூலம் 35 கிமீ வரை செல்லலாம். சார்ஜ் செய்ய 3 மணி நேரம் பிடிக்கும்.

உந்துசக்தி

உந்துசக்தி

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லத்தக்க அம்சங்களை இந்த எலக்ட்ரிக் கார் கொண்டிருக்கும். எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்கும்போது அதிகபட்சம் 120 கிமீ வேகம் வரை செல்லும்.

மைலேஜ்

மைலேஜ்

கணக்கீடுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்த ஹைபிரிட் கார் லிட்டருக்கு 40 கிமீ என்ற அளவில் மைலேஜ் கொடுக்குமாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2013, 13:17 [IST]
English summary
German car maker Bmw to unveil the next i series plug in hybrid car, i8 sports couope in Frankfurt motor show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+