சென்னையில் விரைவில் புதிய மினி கூப்பர் உற்பத்தி: பிஎம்டபிள்யூ அறிவிப்பு
'சென்னை ஆலையில் விரைவில் புதிய மினி கூப்பர் காரின் உற்பத்தி துவங்கப்படும்' என, பிஎம்டபிள்யூ தலைவர் பிலிப் வான் சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய, அமெரிக்க மார்க்கெட்டுகளில் அறிமுகமாகும் கார் மாடல்கள் பல மாதங்கள் அல்லது ஓர் ஆண்டு இடைவெளியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதுதான் வழக்கம்.
இப்போது இந்திய கார் மார்க்கெட் மிக வலுவான வர்த்தக போக்கை கொண்டிருப்பதால் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் வெளிநாடுகளில் அறிமுகமாகும் மாடல்களை உடனடியாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மினி கூப்பர் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.
{photo-feature}


Click it and Unblock the Notifications








