இந்தியாவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் செடான் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ள இந்த புதிய ஃபேஸ்லிப்ட் 5 சீரிஸ் கார் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ ஷோரூம்களிலும் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் இந்த புதிய பிஎம்டபிள்யூ மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றம்

வெளிப்புற மாற்றம்

மேம்படுத்தப்பட்ட புதிய சிறுநீரக வடிவ கிரில், புதிய ஹெட்லைட் கன்சோல், முகப்பு பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்திலும் பம்பர், டெயில் லைட்டுகளுடன், அலாய் வீல் டிசைனிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

மாடல்கள்

மாடல்கள்

520டி, 525டி மற்றும் 530டி எம் ஸ்போர்ட் ஆகிய மாடல்களில் கிடைக்கும். இதில், 520டி மாடலில் லக்சுரி லைன் தவிர மாடர்ன் லைன் என்ற புதிய வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

520 டி மாடலில் 184 எச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 525டி மாடலில் 218 எச்பி ஆற்றலையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 530டி மாடலில் 258 எச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அனைத்து மாடல்களும் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

 சிறப்பு தொழில்நுட்பம்

சிறப்பு தொழில்நுட்பம்

அதிக எரிபொருள் சேமிப்பை தரும் வகையில் டிரைவிங் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் விதமான சிறப்பு தொழில்நுட்ப வசதி அனைத்து மாடல்களிலும் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். சாலை நிலைகளுக்கு தக்கவாறு ஈக்கோப்ரோ, கம்போர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய 4 விதமாக டிரைவிங் ஆப்ஷனை மாற்றிக் கொள்ளலாம். இதில், ஸ்போர்ட் ப்ளஸ் ஆப்ஷன் 525டி மற்றும் 530டி மாடல்களில் மட்டுமே கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

520டி மாடர்ன் லைன்: ரூ.46.90 லட்சம்

520டி லக்சுரி லைன்: ரூ.46.90 லட்சம்

525டி லக்சுரி ப்ளஸ்: ரூ.51.90 லட்சம்

530டி எம் ஸ்போர்ட்: ரூ.57.90 லட்சம்

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2013, 14:39 [IST]
English summary
BMW has launched the facelifted 5 Series in India. The 2013 version of the luxury sedan is basically a cosmetic update that now also gets a Modern Line trim with prices starting at Rs 46.90 lakh (ex-showroom Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+