பிஎம்டபிள்யூ எக்ஸ்1 அறிமுகம்: ஸ்லைடரில் முக்கிய அம்சங்கள்
ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு சவால் விடும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய எக்ஸ்1 மாடலை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.சொகுசு மார்க்கெட்டின் என்ட்ரி லெவல் எஸ்யூவியில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 முக்கிய இடத்தை பெற்ற மாடல். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆடி விற்பனைக்கு கொண்டு வந்த க்யூ3 எஸ்யூவியால் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, வடிவமைப்பில் சிறு மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் எக்ஸ்1 காரை மேம்படுத்தியிருக்கிறது பிஎம்டபிள்யூ. இளம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்கள் நிரம்ப பெற்ற இந்த சொகுசு காரை கடந்த 14ந் தேதி காதலர் தினத்தன்று பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய பிஎம்டபிள்யூ காரில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறு அறிமுகம்
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் எக்ஸ்1 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 5,435 எக்ஸ்1 கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 அறிமுக விழா
டெல்லியில் நடந்த எக்ஸ்1 அறிமுக விழாவில் பிஎம்டபிள்யூ இந்தியப் பிரிவு தலைவர் பிலிப் வான் சர் மற்றும் பாலிவுட் நடிகை தியா மிர்சா காரை அறிமுகம் செய்த காட்சி.

சென்னையில் உற்பத்தி
சென்னையிலுள்ள ஆலையில் புதிய எக்ஸ்1 அசெம்பிள் செய்யப்பட உள்ளது. சென்னை ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் பிஎம்டபிள்யூவின் 6வது மாடல்.

வெளிப்புற மாற்றம்
பலரது கனவில் பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன. அதிலும், இந்த மாடல் வாங்குவதற்கு வெறிகூட்டும் டிசைனுடன் வந்திருக்கிறது.வளையங்கள் கொண்ட ஹெட்லைட்டுகள் கூடுதல் கவர்ச்சியை தரும். புதிய ஏர்டேம், குரோம் பூச்சுடன் கூடிய முன்பக்க பம்பர் ஆகியவை முகப்புக்கு கூடுதல் வசீகரத்தை கொடுக்கிறது.

எஞ்சின் விபரம்
புதிய எக்ஸ்1 கார் டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் உயிர் கொடுக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
புதிய எக்ஸ்1 காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
புதிய எக்ஸ்1 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சம் 184 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

முக்கிய அம்சங்கள்
புதிய எக்ஸ்1 காரின் சென்ட்ரல் கன்சோலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு கவர்ச்சி கூடியுள்ளது. இதேபோன்று, ஸ்டீயரிங் வீலில் சர்வோட்ரானிக் வசதி கிடைக்கும்.

வேரியண்ட்கள்
விரும்பும் அம்சங்கள் மற்றும் வசதிகளுக்கு தகுந்தவாறு 3 வேரியண்ட்களில் கிடைக்கும். வேரியண்ட் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிரைவ் 20டி
எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட் லைன்
எஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்

நோ 4 வீல் டிரைவ்
புதிய எக்ஸ்1 காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட் இல்லை.

ஈக்கோப்ரோ தொழில்நுட்பம்
அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் அனைத்து வேரியண்ட்களிலும் பிரேக் ஆற்றல் வீணாகாமல் சேமிக்கும் ஈக்கோப்ரோ தொழில்நுட்பம் உண்டு.

பனரோமிக் சன்ரூஃப்
விரும்பினால் பனரோமிக் சன்ரூஃபை ஆப்ஷனலாக தேர்வு செய்து கொள்ளலாம்.

விலை விபரம்
முந்தைய மாடலைவிட ரூ.40,000 கூடுதல் விலையில் புதிய எக்ஸ்1 விற்பனைக்கு வந்துள்ளது. வேரியண்ட் வாரியான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரத்தை கீழே காணலாம்.எஸ்டிரைவ் 20டி: ரூ.27.9 லட்சம்
எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட் லைன் : ரூ.32.5 லட்சம்
எஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன் : ரூ.32.5 லட்சம்


Click it and Unblock the Notifications








