எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறப்பு!
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் புதிய பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. வால்வோவை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறக்கப்படும் இரண்டாவது கார் ஷோரூம் இதுவாகும்.
சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஏற்கனவே பிஎம்டபிள்யூ கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது ஷோரூம் தற்போது எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறக்கப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூவின் அங்கீகாரம் பெற்ற டீலரான கேயுஎன் நிறுவனம் இந்த புதிய ஷோரூமை திறந்துள்ளது.

ஷோரூம் லே அவுட்
பிஎம்டபிள்யூவின் 'அர்பன் ஸ்ட்ரீட் டிஸ்ப்ளே' கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. 3014 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. நம்பர் 49, 50எல் ஒயிட்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் என்ற முகவரியில் இந்த புதிய ஷோரூம் செயல்படுகிறது.

கார்கள் டிஸ்ப்ளே
மொத்தம் 6 கார்களை இந்த ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தும் வசதி கொண்டுள்ளது. மேலும், இந்த கேயுஎன் பிஎம்டபிள்யூ ஷோரூமில் பணிபுரியும் அனைவரும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வீஸ் மையம்
இந்த புதிய ஷோரூமில் விற்பனை பிரிவு மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை மற்றும் அம்பத்தூரில் பிஎம்டபிள்யூவின் கார் சர்வீஸ் மையங்கள் செயல்படுகின்றன.

புதிய ஷோரூம்கள்
தற்போது இந்தியாவில் 37 கார் ஷோரூம்களுடன் செயல்பட்டு வரும் பிஎம்டபிள்யூ அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஷோரூம்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ கார்கள்
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 13 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்த கார்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.


Click it and Unblock the Notifications








