இந்தியாவில் 3 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ!

பல்வேறு கார் ரகங்களின் வசதிகளை ஒருங்கே வழங்கும் அம்சம் கொண்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக ஆட்டோகார் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பிரத்யேக அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஜிடி வெர்ஷன்

ஜிடி வெர்ஷன்

பல்வேறு ரக கார்களில் இருக்கும் வசதிகளை ஒருங்கே வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மாடலுக்கு ஜிடி என்று விளக்கம் தருகிறது பிஎம்டபிள்யூ. குழப்பத்தை தீர்க்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

 அம்சங்கள்

அம்சங்கள்

உள்புற இடவசதி, பூட் ரூம் கொள்ளளவு ஆகியவை எஸ்யூவி போன்றும், பாடி ஸ்டைல் கூபே ரகத்திலும், ஓட்டுதல் தரத்தில் செடான் போன்றும் இந்த 3 சீரிஸ் ஜிடி கார் இருக்கும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

வித்தியாசம்

வித்தியாசம்

சாதாரண 3 சீரிஸ் காரைவிட ஜிடி வெர்ஷன் உயர்த்தில் 200 மிமீ, அகலத்தில் 19 மிமீ, உயரத்தில் 79 மிமீ கூடுதலாக இருக்கிறது. வீல் பேஸும் 110 மிமீ கூடுதலாக கொண்டிருப்பதால் உட்புற இடவசதி அதிகமிருக்கும். 5 சீரிஸ் காரில் இருப்பது போன்று பின்புற பயணிகளுக்கு லெக்ரூம் தாராளமாக இருக்கும்.

பூட்ரூம்

பூட்ரூம்

பின் இருக்கையை மடக்கினால் இதன் பூட் ரூமை 1,600 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

இறக்குமதி

இறக்குமதி

இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். டீசலில் மட்டுமே வரும் என தகவல்கள் கூறுகின்றன.

விலை

விலை

ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2013, 17:42 [IST]
English summary
Autocar India now reports that BMW India could launch the 3 Series GT at the 2014 Auto Expo in February next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+