பிஎம்டபிள்யூவின் புதிய பெர்ஃபார்மென்ஸ் கூபே எம்4 அறிமுகம்

பிஎம்டபிள்யூவின் எம்3 கூபே காருக்கு மாற்றான புதிய எம்4 பெர்ஃபார்மென்ஸ் காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின், கலிஃபோர்னியாவிலுள்ள மான்டிரெவில் நடைபெறும் பெபிள் பீச் கான்கர்ஸ் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கான்செப்ட் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

அதற்கு முன்னதாகவே ஆட்டோமொபைல் பிரியர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த காரை பிஎம்டபிள்யூ வெளியிட்டுவிட்டது. கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அறிமுகம் செய்யப்பட்ட மாடல் உற்பத்தி நிலை அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த புதிய எம்4 கார் பிஎம்டபிள்யூவுக்கு புதிய அந்தஸ்தை பெற்று தரும். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் இந்த காரின் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வைக்கப்படுவதுடன், விற்பனைக்கும் கொண்டு வரப்படும்.

புதிய கலர்

புதிய கலர்

ஆரம் டஸ்ட் என்ற புத்தம் புதிய வண்ணத்தில் இந்த காரை அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ.

முகப்பு

முகப்பு

3 பிரிவுகளாக்கப்பட்ட பெரிய ஏர்டேம்கள், சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைன், பிஎம்டபிள்யூவின் சிறுநீரக வடிவ இரட்டை கிரில்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் என தான் ஒரு பெர்ஃபார்மென்ஸ் கார் என்பதை நிரூபிக்க முயல்கிறது.

 கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

எடை குறைந்த கார்பன் ஃபைபர் கலந்த பிளாஸ்டி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த காரில் 450 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் அம்சங்களை கொண்டிருக்கும். 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் தாண்டும் சக்தி கொண்டதாக இருக்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

எம்5 மற்றும் எம்6 பெர்ஃபார்மென்ஸ் கார்களை போன்றே இந்த காரிலும் பிஎம்டபிள்யூவின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிராஸ்மிஷனும், ரியர் வீல் டிரைவிங் கொண்டதாக இருக்கும்.

அலாய் வீல்

அலாய் வீல்

இந்த காரில் 20 இஞ்ச் லைட் வெயிட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2013, 17:25 [IST]
English summary
Here it is. The next generation M4, the successor to the M3 Coupe. The M4 is still far from entering production, but the concept looks almost ready to hit the road.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+