29ல் பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் ரிலீஸ்!

பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் கிளறியிருக்கும் பிஎம்டபிள்யூவின் புதிய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் வரும் 29ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பெரிய அளவிலான உற்பத்தி திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் கான்செப்ட் நிலையிலிருந்து, பல்வேறு மாற்றங்களுடன் உற்பத்தி நிலை காராக மேம்பட்டிருக்கிறது. இந்த கார் குறித்த சில முக்கிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சில மாற்றங்கள்

சில மாற்றங்கள்

இந்த காரின் தோற்றம்தான் அனைவரையும் ஈர்க்க காரணம். கான்செப்ட் நிலையிலிருந்து பம்பர், பின்புற கதவுகள், ஹெட்லைட், டெயில் லைட்டுகளுக்கான கிளஸ்ட்டர் ஆகியவை மாற்றங்கள் கண்டுள்ளன. டாடா நானோ கார் போன்று ரியர் வீல் டிரைவ் கொண்டது.

 எலக்ட்ரிக் மோட்டார்

எலக்ட்ரிக் மோட்டார்

இந்த காரில் 172பிஎஸ் பவரையும், 249என்எம் டார்க்கையும் அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.

எலக்ட்ரிக் மோட்டார்

ஒரு சார்ஜுக்கு...

ஒரு சார்ஜுக்கு...

இதில் பொருத்தப்பட்டிருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 128 கிமீ முதல் 160 கிமீ வரை பயணம் செய்ய முடியும்.

ஹைபிரிட் நுட்பம்

ஹைபிரிட் நுட்பம்

இந்த எலக்ட்ரிக் காரில் 2 சிலிண்டர் கொண்ட சிறிய பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மொத்தமாக 300 கிமீ வரை செல்லலாம்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

பிஎம்டபிள்யூவின் தாயகமான ஜெர்மனியில் இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் முதலில் விற்பனைக்கு வருகிறது.

 டெஸ்ட் டிரைவுக்கு கியூ

டெஸ்ட் டிரைவுக்கு கியூ

பெரும் ஆவலை ஏற்படுத்திய இந்த காருக்கு இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர்.

விலை

விலை

ஜெர்மனியில் 29,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22.65 லட்சம்) விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்தியாவுக்கு உண்டா?

இந்தியாவுக்கு உண்டா?

ஹோண்டா சிவிக், டொயோட்டா பிரையஸ் போன்ற ஹைபிரிட் நுட்பம் கொண்ட எலக்ட்ரிக் கார்கள் எதிர்பார்த்த விற்பனையை இந்தியாவில் சாதிக்கவில்லை. அதற்கான, கட்டமைப்பும், வாடிக்கையாளர் கண்ணோட்டமும் சாதகமாக இல்லை. எனவே, இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2013, 11:54 [IST]
English summary
Bavarian based Luxury car maker BMW is all set to unveil the production version of i3 electric car on July 29. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+