ஸ்பெஷல் எடிசன் வேரோன் கார்களை வெளியிடும் புகாட்டி!
வேரோன் கார்களின் ஸ்பெஷல் எடிசன்களை புகாட்டி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது வேரோன் அடிப்படையில் 6 புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களை வெளியிட இருக்கிறது.
புகாட்டிக்காக கார் பந்தயங்களில் பங்கேற்ற வீரர்களை கவுரவிக்கும் விதத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் வர இருக்கினறன. இந்த 6 ஸ்பெஷல் எடிசன் கார்களில் முதலாவதாக புகாட்டிக்கு முதன்முறையாக லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி தேடித் தந்த ஜீன் பியரி விமிலியை நினைவுகூறும் விதத்தில் வெளியிடப்படுகிறது.

விட்டேஸி கன்வெர்ட்டிபிள்
உலகின் அதிவேக கன்வெர்ட்டிபிள் மாடலாக பெயர் பெற்றது இந்த கார். மணிக்கு 408.84 கிமீ வேகத்தை தொட்டு சாதனை புரிந்த வேரோன் கன்வெர்ட்டிபிள் கார் இது.

ஸ்பெஷல் எடிசன்
1937 மற்றும் 1939ல் லீ மேன்ஸ் ஹவர்ஸ் பந்தயத்தில் புகாட்டிக்கு வெற்றி தேடித்தந்த ஜீன் பியரி விமிலியின் நினைவாக இந்த கார் வெளியிடப்படுகிறது.

ஜீன் பியரி
படத்தில் இருப்பவர்தான் ரேஸ் டிரைவர் ஜீன் பியரி விமிலி.

முதல் வெற்றி
புகாட்டியின் நீல நிற 57ஜி காரில்தான் லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் போட்டியில் விமிலி வெற்றி பெற்றார். எனவே, ஸ்பெஷல் எடிசனாக வெளியிடப்படும் காரும் நீல நிறத்தில் வருகிறது.

ஏராளமான வெற்றி
லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் போட்டி மட்டுமின்றி அல்ஜீரியன் கிரான்ட் பிரிக்ஸ், லா டர்பி மலையேற்ற பந்தயங்களிலும் புகாட்டி காரை ஓட்டி ஜீன் பியரி விமிலி வெற்றி பெற்றுள்ளார்.

லிமிடேட் எடிசன்
முதலில் வெளியாக இருக்கும் ஜீன் பியரி விமிலிக்கான ஸ்பெஷல் எடிசன் பிராண்டில் மொத்தம் 3 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.

எஞ்சின்
புகாட்டியின் வேரோன் 16.4 கிரான்ட் ஸ்போர்ட் விட்டெஸி ஸ்பெஷல் எடிசன் காரில் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இநத் எஞ்சின் 1,184 எச்பி ஆற்றலையும், 1,500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.6 வினாடிகளில் தொட்டுவிடும்.

புகாட்டியின் அறிவிப்பு
புகாட்டியின் ரேஸ் பாரம்பரியத்தில் ஏராளமான ஜாம்பவான்கள் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களை கவுரப்படுத்தும் விதமாக இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களை வெளியிடுகிறோம்," என்று புகாட்டியிந் தலைவர் வோல்ஃப்கேங் ஸ்ரெய்பெர் கூறியிருக்கிறார்.

ஓர் ஆண்டுக்குள்
வேரோன் பிராண்டில் வெளிவர இருக்கும் 6 ஸ்பெஷல் எடிசன் கார்களும் அடுத்த 12 மாதங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








