400வது புகாட்டி வேரோன் கார் விற்பனை... இன்னும் 50 கார்கள் மட்டுமே..!!
கடந்த 2005ம் ஆண்டு முதல் புகாட்டி வேரோன் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகின் அதிவேக கார்களில் ஒன்றாக கருதப்படும் புகாட்டி வேரோன் கார்களை வாங்குவதை பெரும் கோடீஸ்வரர்கள் தங்களது வாழ்நாள் கனவாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், 400வது புகாட்டி வேரோன் கார் விற்பனையாகியுள்ளது. அரபு நாட்டை சேர்ந்த ஷேக் ஒருவர் இந்த காரை முன்பதிவு செய்து வாங்கியுள்ளார். இந்த கார் புகாட்டிக்காக 1937 முதல் 1939 வரை லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ் ராலி பந்தயத்தில் பங்கேற்ற ஜீன் பியரி விமிலியின் நினைவாக வெளியிடப்பட்ட சிறப்பு பதிப்பு கார் ஆகும்.

விலை
இந்த காரை ரூ.18 கோடி விலையில் இந்த சிறப்பு பதிப்பு கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரோட்ஸ்டெர்
அரபு ஷேக் வாங்கியிருக்கும் ஸ்பெஷல் எடிசன் கார் ரோட்ஸ்டெர் மாடல் புகாட்டி வேரோன் கார். இது உலகின் அதிவேக கன்வெர்ட்டிபிள் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சின்
இந்த காரில் 8.0 லிட்டர் டபிள்யூ16 க்வாட் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 1184 பிஎச்பி ஆற்றலையும், 1500 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டாப் ஸ்பீடு
0- 100 கிமீ வேகத்தை 2.6 நொடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்ட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 408 கிமீ வேகத்தை தொடும் ஆற்றல் வாய்ந்தது.

தயாரிப்பு
மொத்தம் 450 புகாட்டி வேரோன் கார்கள் தயாரிக்கப்பட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 கார்கள் விற்பனையாகியுல்ளது. இதில், 300 கார்கள் கூபே ரகத்திலும், 100 கார்கள் ஸ்போர்ட் ரோட்ஸ்டெர் மாடலிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








