இங்கே புகாட்டி வேரோன் நாள் வாடகைக்கு கிடைக்கும்...!!
புகாட்டி காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்பது ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் கோடீஸ்வரர்களின் கனவாக உள்ளது. ஆனால், அந்த காரின் விலை பலருக்கு புகாட்டி வெறும் கனவோடு முற்றுப் பெற்று விடுகிறது.
இந்த குறையை போக்கும் விதத்தில் இங்கிலாந்தை சேரந்த ஒரு நிறுவனம் புகாட்டியை நாள் வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது. ஹோல்டர்ஸ் வெகிக்கிங் கான்ட்ராக்ட்ஸ் என்ற அந்த நிறுவனம் ஆடம்பர கார்களை வாடகைக்கு விட்டு வருகிறது. இருப்பினும், புகாட்டி வேரோனை முதல்முறையாக வாடகைக்கு பெறும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாள் வாடகை
ஒரு நாளைக்கு 16,500 பவுண்டு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.15.5 லட்சமாகும்.

வேரோன் சிறப்பு
உலகின் அதிவேக கார் மாடல்களில் ஒன்று. மணிக்கு 408.47 கிமீ வேகத்தை தொட்டதாக புகாட்டி தெரிவித்தது. இந்த கார் டாப் ஸ்பீடில் செல்லும்போது நிமிடத்திற்கு 45,000 லிட்டர் காற்றை கிரகித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனுக்கு 4 நாட்களுக்கு தேவையான காற்றாக இது குறிப்பிடப்படுகிறது. தற்போது உலகின் அதிவேக கார் பட்டத்தை அமெரிக்காவின் ஹென்னிஸி வேனோம் ஜிடி பெற்றது நினைவிருக்கலாம்.

எஞ்சின்
வாடகைக்கு கிடைக்கும் புகாட்டி வேரோன் ஸ்டான்டர்டு மாடல். இந்த காரில் 1001 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு சீகுவன்ஷியல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

உந்துசக்தி
0-100 கிமீ வேகத்தை 2.46 வினாடிகளிலும், 0-300 கிமீ வேகத்தை 16.2 வினாடிகளிலும் இந்த கார் தொட்டுவிடும் வல்லமை கொண்டது.

விலை
பிரெஞ்ச் தயாரிப்பான புகாட்டி வேரோனின் வித்தியாசமான டிசைனும் அனைவரின் ஆவலையும் தூண்டுவதாக இருக்கிறது. இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.8 கோடி விலை கொண்டது.

பிற மாடல்கள்
ஃபெராரி என்ஸோ கார் 8,000 பவுண்ட்டுக்கும், பென்ஸ் எஸ்எல்ஆர் மெக்லாரன் 1995 பவுண்ட்டுக்கும் நாள் வாடகைக்கு கிடைக்கிறது. இதுதவிர, அஸ்டன் மார்ட்டின் வாண்டேஜ் வி8, ஆடி ஆர்8, பென்ட்லீ, லம்போர்கினி என பெரும்பாலான கார்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








